எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை, செங்கல்பட்டு, தருமபுரி மாவட்டங்களில் ரூ. 300 கோடியில் 18 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும் திருச்சியில் ரூ. 5¼ கோடி செலவில் தலைமைப் பொறியாளர் அலுவலகக் கட்டிடத்தையும் முதலமைச்சர் எடப்பாடி திறந்து வைத்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச்செயலகத்தில், எரிசக்தித் துறையின் சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் – நாட்டறம்பள்ளியில் 21 கோடியே 86 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/33 கி.வோ. துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும் 278 கோடியே 9 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 17 துணை மின் நிலையங்கள் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் திருச்சியில் 5 கோடியே 22 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலைமை பொறியாளர் (மின் தொடரமைப்பு திட்டங்கள்) அலுவலகக் கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படுகின்ற உச்சகட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில், சரியான மின் அழுத்தத்துடன் சீரான மின்சாரம் மக்களுக்கு வழங்கிட கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது.
அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் – நாட்டறம்பள்ளியில் 21 கோடியே 86 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/33 கி.வோ. துணை மின் நிலையத்தை முதலமைச்சர் நேற்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
சமயநல்லூரில் :-
மேலும் மதுரை மாவட்டம் – சமயநல்லூரில் 94 கோடியே 44 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒரு 230/110 கி.வோ. துணை மின் நிலையம், கடலூர் மாவட்டம் – மேலப்பாலையூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டம்- தேனூர் (தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம்) ஆகிய இடங்களில் 24 கோடியே 2 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள்,
கோயம்புத்தூர் மாவட்டம் – சின்னதடாகம் மற்றும் க.க.சாவடி மற்றும் விழுப்புரம் மாவட்டம் – கெடார் ஆகிய இடங்களில் 38 கோடியே 38 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மூன்று 110/22 கி.வோ. துணை மின் நிலையங்கள்,
சென்னை மாவட்டம் -பள்ளிக்கரணை, செங்கல்பட்டு மாவட்டம்- திருமணி, தருமபுரி மாவட்டம் – இலக்கியம்பட்டி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் – இ.டி.ஏ. ஸ்டார் சிட்டி மாம்பாக்கம் ஆகிய இடங்களில் 73 கோடியே 7 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நான்கு 110/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்,
நீலகிரி மாவட்டம் -ஜெகதளா மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் -கீரமங்கலம் ஆகிய இடங்களில் 16 கோடியே 22 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள் (விகிதாசார அறிமுகம்),
செங்கல்பட்டு மாவட்டம் – காயரம்பேடு மற்றும் கோவிந்தாபுரம், திருவள்ளூர் மாவட்டம் – வைகை காலனி, திருவண்ணாமலை மாவட்டம் -பனைஓலைப்பாடி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் – விஜயாபதி ஆகிய இடங்களில் 31 கோடியே 94 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான ஐந்து 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்,
என மொத்தம் 299 கோடியே 96 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 18 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.
மேலும், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் திருச்சியில் 5 கோடியே 22 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலைமை பொறியாளர் (மின் தொடரமைப்பு திட்டங்கள்) அலுவலகக் கட்டடத்தையும் முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 1 week ago |
-
உ.பி. மகா கும்பமேளாவில் இன்று புனித நீராடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
04 Feb 2025புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி, துறவிகளுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
-
தமிழ்நாட்டில் ஒரு வாரம் வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்
04 Feb 2025சென்னை: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றத்திற்கு பழனியில் இருந்து காவடியுடன் புறப்பட்ட பா.ஜ.வினர் கைது
04 Feb 2025திண்டுக்கல் : பழனியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்ட பா.ஜ.க.வினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
04 Feb 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்து விற்பனையானது.
-
அரசு காலி பணியிடங்கள் எத்தனை? - டி.என்.பி.எஸ்.சி தலைவர் விளக்கம்
04 Feb 2025சென்னை : இந்த ஆண்டு அரசு பணிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்பது ஏப்ரல் மாதம் தெரியவரும் என்று தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.
-
மசோதாக்களுக்கு அனுமதி வழங்காத விவகாரம்: 24 மணிநேரத்தில் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் கவர்னருக்கு சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தல்
04 Feb 2025புதுடெல்லி: மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் கிடப்பில் போடப்பட்ட உள்ளிட்ட விவகாரங்களில் அரசியல் சாசனப்படி 24 மணிநேரத்தில் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க
-
உ.பி. மகா கும்பமேளாவில் புனித நீராடிய பூடான் மன்னர்
04 Feb 2025லக்னோ: உ.பி. பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் நேற்று புனித நீராடினார்.
-
11-ம் தேதி ராமேசுவரம் வருகிறார் பிரதமர் மோடி
04 Feb 2025சென்னை: பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி தமிழகம் வருகிறார்.
-
அரசு பஸ் ஓட்டியபடி ரீல்ஸ் வீடியோ எடுத்த டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ்
04 Feb 2025சென்னை : சென்னையில் பணியின் போது அரசு பஸ் ஓட்டியபடி ரீல்ஸ் எடுத்து வீடியோ ரிலீஸ் செய்த டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர்.
-
தி.மு.க. - நா.த.க. இடையே நேரடிப்போட்டி: ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
04 Feb 2025ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 8ம் தேதி நடக்கிறது.
-
உத்தரபிரதேசத்தில் சரக்கு ரெயில்கள் மோதி விபத்து
04 Feb 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் 2 சரக்கு ரெயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
-
ரவுடிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோரி மனு: அபராதத்துடன் தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்
04 Feb 2025சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்து
-
அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, எரிவாயுவுக்கு இனி 15 சதவீத வரி: சீனா பதிலடி
04 Feb 2025பீஜிங் : டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, எரிவாயுவுக்கு 15 சதவீத வரியை சீனா விதித்துள்ளது.
-
வரும் 16, 25-ல் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
04 Feb 2025சென்னை : பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற பிப். 16, 25 ஆகிய தேதிகளில் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ கூறியுள்ளது.
-
பிப்ரவரி 3-வது வாரத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
04 Feb 2025சென்னை : பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் தமிழக சட்டபேரவை கூடுகிறது. இக்கூட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலைஅறிக்கையை தாக்கல் செய்கிறார்.
-
அங்கன்வாடியில் பிரியாணி, சிக்கன் கேட்ட சிறுவனுக்கு அமைச்சர் பதில்
04 Feb 2025திருவனந்தபுரம் : கேரளத்தில் அங்கன்வாடியில் படிக்கும் சிறுவன், தனக்கு உப்புமாவுக்குப் பதிலாக பிரியாணி வேண்டும் எனக் கேட்டதற்கு கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் பதிலளித்துள்ளார்
-
இன்று இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடல்
04 Feb 2025ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 182 மதுக் கடைகள் மூடப்பட்டன.
-
சங்கத்தமிழ் நாள்காட்டி, கலைஞர் கருவூலம் சிறப்பு இணையப்பக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
04 Feb 2025சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (பிப்.
-
ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுகிறார்: ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 Feb 2025புதுடில்லி : தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுவது மிகவும் வருத்தமளிக்கிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
-
கால்நடைகளை கொண்டு செல்ல புதிய விதிமுறைகளை வெளியிட்ட ஐகோர்ட்
04 Feb 2025சென்னை: கால்நடைகளை லாரிகள் மூலம் கொண்டு செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை சென்னை ஐகோர்ட்டு வகுத்து, இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
-
தமிழகத்தில் காலநிலை விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுசெல்ல அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Feb 2025சென்னை: காலநிலை விழிப்புணர்வை மாணவர்கள் மூலமாக அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டுபோய் சேர்க்கவிருக்கிறோம் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அனைத்துப் ப
-
ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா கோலாகலம்
04 Feb 2025திருப்பதி : ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி திருவிழாவில் பக்தர்கள் வாகன சேவைகளை தரிசனம் செய்தனர்.
-
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணி தொடக்கம்
04 Feb 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை நாடு கடத்தும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
-
தைப்பூசம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் வரும் 12-ம் தேதி கோவில் நடை சாத்தப்படும்
04 Feb 2025ராமேசுவரம் : தைப்பூசம் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்ரவரி 12 அன்று நடை சாத்தப்படுகிறது.
-
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி தலைவர் கைது
04 Feb 2025திருப்பூர்: திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.