முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலிகர் முஸ்லிம் பல்கலை.யின் நூற்றாண்டு விழா நாளை நடக்கிறது : பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 20 டிசம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் பிரதமர் உரையாற்றுகிறார். 

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நாளை 22-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மேலும் நிகழ்ச்சியின் போது ஒரு தபால் தலையையும் அவர் வெளியிடுவார். பல்கலைக்கழகத்தின் வேந்தர் சையேத்னா முபதல் சைபுதீன் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர். 

இந்திய மேலவைச் சட்டத்தின் கீழ் முகமது ஆங்கிலோ ஓரியண்டல் (எம்.ஏ.ஓ) கல்லூரியை மத்தியப் பல்கலைக் கழகமாக தரம் உயர்த்தியதையடுத்து, அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம், கடந்த 1920-ம் ஆண்டு பல்கலைக் கழகமாக மாறியது. எம்.ஏ.ஓ கல்லூரி, கடந்த 1877-ம் ஆண்டு சர் சையது அகமது கானால் நிறுவப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தின் அலிகர் நகரில் 467.6 ஹெக்டர் நிலப்பரப்பில் பல்கலைக்கழக வளாகம் அமைந்துள்ளது.  மல்லபுரம் (கேரளா), முர்ஷிதாபாத் ஜங்கிபூர் (மேற்கு வங்காளம்) மற்றும் கிஷன்கஞ் (பிகார்) ஆகிய மூன்று நகரங்களிலும் இந்தப் பல்கலைக் கழகத்தின் மையங்கள் இயங்குகின்றன

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து