முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, சிவகங்கை மருதுபாண்டியர் கோட்டை உள்பட 8 பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னங்கள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்: 17 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்

சனிக்கிழமை, 9 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தொல்லியல் துறை சார்பில் 13 கோடியே 27 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மதுரை மாவட்டத்திலுள்ள திருமலை நாயக்கர் அரண்மனை, சிவகங்கை மாவட்டத்திலுள்ள மருதுபாண்டியர் கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் மலைக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உதயகிரிக் கோட்டை, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சின்னையன்குளம், பூண்டி அருகர்கோயில், தடாகபுரீஸ்வரர் கோயில் மற்றும்  கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் ஆகிய  8 பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களை திறந்து வைத்தார். 

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவித் திட்டத்தின் கீழ், சுற்றுலாத் துறையின் மூலம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 12 நினைவுச் சின்னங்கள் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ள தெரிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம், கட்டபொம்மன் கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம், மனோரா நினைவுச் சின்னம், நாகப்பட்டினம் மாவட்டம், டச்சுக் கல்லறை ஆகிய 3 நினைவுச் சின்னங்கள் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழக முதல்வரால் கடந்த 5.10.2020 அன்று திறந்து வைக்கப்பட்டன. 

அதன் தொடர்ச்சியாக, மதுரை மாவட்டம், திருமலை நாயக்கர் அரண்மனையில்  3 கோடியே 60 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அரண்மனையின் மேற்கூரையில் பழைய  தளஓடுகள் மாற்றப்பட்டு சுண்ணாம்பு கலவையில் புதிய தளஓடுகள் பாவுதல், தூண்களில் சிதிலமடைந்த பகுதிகள் சீர் செய்யப்பட்டு, மேல் பூச்சு கொடுத்தல், திறந்தவெளிப் பகுதியில் புறா தடுப்பு வலை அமைத்தல், பழுதான மர ஜன்னல்கள் மற்றும் கதவுகளை சீர் செய்தல், அரண்மனையைச் சுற்றிலும் மழைநீர் வடிகால் வசதியை  மேம்பாடு செய்தல், அரண்மனையில் குவி மாடங்கள் மற்றும் அரண்மனைச் சுவர்ப் பகுதிகளில்  வண்ணப்பூச்சு பூசுதல் போன்ற பணிகள், 

சிவகங்கை மாவட்டம், மருதுபாண்டியர் கோட்டையில் 60 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சிதிலமடைந்த கோட்டைச் சுவர் மற்றும் கூரை ஆகியவை சீரமைக்கப்பட்டு, பாதுகாவலர் அறை, மின்விளக்குகள், கோட்டையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் கற்கட்டுமானம் அமைக்கப்பட்டு, அதன்மேல் இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைத்தல்  போன்ற பணிகள்,  

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மலைக்கோட்டையில்  2 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் கோட்டை அமைந்துள்ள மலையைச் சுற்றிலும் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் கற்கட்டுமானம் அமைக்கப்பட்டு, அதன்மேல் இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைத்து, பாதுகாவலர் அறை, கழிப்பறை வசதி, மின்விளக்குகள்,  கோட்டைக்கு செல்லும் வழிப்பாதையில் தளம் அமைத்தல் போன்ற பணிகள், 

கன்னியாகுமரி மாவட்டம், உதயகிரி கோட்டையில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  பழுதடைந்த கோட்டைச் சுவர்ப் பகுதிகள் சீர் செய்யப்பட்டும், கோட்டைச் சுவரில் மேல்பகுதி வண்ணப்பூச்சு பூசுதல், இங்குள்ள டிலெனாய் கல்லறை பகுதி மேம்பாடு பணிகள் மற்றும் செல்லும் வழிப்பாதையில் கற்தளம் அமைத்தல் போன்ற பணிகள், 

திருவண்ணாமலை மாவட்டம் சின்னையன்குளத்தில் 15 லட்சத்து  80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாவலர் அறை, கழிப்பறை மேம்பாடு வசதி, மின்விளக்குகள் போன்ற பணிகள்,  திருவண்ணாமலை மாவட்டம், பூண்டி அருகர் கோயிலில் 33 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாவலர் அறை, மின்விளக்குகள்,  கோயிலைச் சுற்றிலும் கற்தளம் அமைத்தல், வழிப்பாதையில் அணுகுசாலை அமைத்தல் போன்ற பணிகள்,  திருவண்ணாமலை மாவட்டம், தடாகபுரீஸ்வரர் கோயிலில் ஒரு கோடியே  85 லட்சத்து  81 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாவலர் அறை, பார்வையாளர்களுக்கு தங்கும் அறை மற்றும்  கழிப்பறை வசதி, மின்விளக்குகள், கோயிலைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் கற்கட்டுமானம் அமைக்கப்பட்டு, அதன்மேல் இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைத்தல்  போன்ற பணிகள், 

திருவண்ணாமலை மாவட்டம், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலில் ஒரு கோடியே 99 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாவலர் அறை, பார்வையாளர்களுக்கு தங்கும் அறை மற்றும்  கழிப்பறை வசதி, மின்விளக்குகள், கோயில் வளாகத்தில் தரைத்தளம் அமைத்தல், கோயிலைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் கற்கட்டுமானம் அமைக்கப்பட்டு, அதன்மேல் இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைத்தல்  போன்ற பணிகள் என மொத்தம் 13 கோடியே 27 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட 8 பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களை தமிழக முதல்வர்  திறந்து வைத்தார். 

மேலும், தொல்லியல் துறையில் தொல்லியல் அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 17 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழக முதல்வர்  7 நபர்களுக்கு  பணி நியமன ஆணைகளை வழங்கினார்.  

சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன்  அவர்களின்  நேரடி வாரிசான வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு துரை என்பவரின்  மகன் கணபதி ராஜாவுக்கு, மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையிலும் மற்றும்  முருகதேவிக்கு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன்கோட்டை நினைவுச் சின்னத்திலும்,  சிறப்பு நேர்வாக கருணை அடிப்படையில் காவலர் பணியிடத்திற்கான  பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி.உதயகுமார், பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் சண்முகம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை  கூடுதல் தலைமைச்  செயலாளர்  விக்ரம் கபூர், தொல்லியல் துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர்   உதயச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து