முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி திட்டம்: வாழ்த்து கூறிய ராஜபக்‌சேவுக்கு பிரதமர் மோடி நன்றி

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசித் திட்டத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர் ராஜபக்சேச வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் மோடியும் நன்றி தெரிவித்து டுவீட் செய்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கப்பட்டது. முதல் நாளில் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்ட நிலையில் 1.91 லட்சம் மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். 

இது குறித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌சே தனது டுவிட்டர் பக்கத்தில், உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா துவக்கி உள்ளமைக்கு வாழ்த்துகள். இது மிகவும் முக்கியமான அடி. சீரழிக்கும் பெருந்தொற்றுக்கு முடிவு கட்டும் தருணம் தொடங்கி விட்டது எனப் பதிவிட்டிருந்தார்.  இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

அதில், எங்களுடைய விஞ்ஞானிகள், முன்களப் பணியாளர்களின் அயராத உழைப்பு இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.  தடுப்பூசியை வேகமாகத் தயாரித்தது ஆரோக்கியமான நோயற்ற உலகை உருவாக்கும் உலக நாடுகளின் கூட்டுமுயற்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பணி எனக் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து