முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேதாஜி பிறந்தநாள் துணிச்சல் தினம் ஆக கொண்டாடப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அந்த நாளை துணிச்சல் தினமாக (பராக்கிரம் திவாஸ்) கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை மத்திய மந்திரி பிரகலாத் சிங் ஜோஷி அறிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது:- 23-ந் தேதி கொல்கத்தாவில் நடக்கும் முதலாவது துணிச்சல் தின விழாவில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். தேசிய நூலக மைதானத்தில் நேதாஜி தொடர்பான கண்காட்சியை திறந்து வைக்கிறார்.

நேதாஜி அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மோடி கவுரவிக்கிறார். 

நேதாஜியின் 125-வது பிறந்தநாளை ஓராண்டு முழுவதும் கொண்டாடுவதற்கான திட்டங்களை வகுக்க பிரதமர் தலைமையில் 85 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து