Idhayam Matrimony

52-வது நினைவு தினம்: சென்னை அண்ணா நினைவிடத்தில் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை

புதன்கிழமை, 3 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில், அ.தி.மு.க. சார்பில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

அண்ணாவின் 52-வது நினைவு நாள் நேற்று தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. ஆங்காங்கே அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது படத்துக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.  பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளான நேற்று காலை 10.30 மணியளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  அதனைத் தொடர்ந்து தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும், பொதுமக்களும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து