முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதியப்பட்ட சில வழக்குகள் வாபஸ்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை அனுமதிக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்தின் போது பதியப்பட்ட சில வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கவர்னர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலுரையின்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை அறிவித்தார். 

சட்டப்பேரவையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,  

கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாட்டு மக்களின் உரிமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட உணர்வுபூர்வமான போராட்டம். இந்த போராட்டத்தின் போது பலர் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தவே போராடினர்.

இந்த போராட்டங்களின் போது சட்டம் ஒழுங்கை பராமரித்திட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. எனினும் சில விரும்பத்தகாத சம்பவங்கள் அப்போது நடந்து விட்டன.

இந்த சம்பவத்தில் உணர்வுபூர்வமாக போராடிய மக்களும் பாதிக்கப்பட்டனர் என்பதை கருத்தில் கொண்டு இந்த போராட்டங்களின் போது பதியப்பட்ட வழக்குகளில் காவலர்களை தாக்கியது மற்றும் தீ வைப்பு போன்ற சட்டப்பூர்வமாக திரும்ப பெற முடியாத வழக்குகளை தவிர மற்ற வழக்குகளை சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற்று எனது தலைமையிலான அம்மாவின் அரசு திரும்பப் பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து