முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 ஆண்டுகளில் 400 ஆண்டு கால சாதனை: முதல்வரின் திட்டங்களை மறைக்கும் வண்ணம் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரங்கள் செய்கின்றன: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

சனிக்கிழமை, 6 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : 4 ஆண்டுகளில் 400 ஆண்டு கால சாதனை புரிந்த முதல்வரின் திட்டங்களை எல்லாம் மறைக்கும் வண்ணம் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரங்களை செய்து வருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

திருமங்கலம் அம்மா கோவிலில் கழக அம்மா பேரவை சார்பில்1,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கம்ப்யூட்டர் வழங்கினார் 

கழக அம்மா பேரவை சார்பில் அம்மா சேரிடபில் டிரஸ்டை சேர்ந்த 1,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு கணினி வழங்கும் நிகழ்ச்சி திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.குன்னத்தூரில் அம்மா திருக்கோயில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவைை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கணினியை வழங்கினார் 

இந்த நிகழ்ச்சியில் கழக செய்தித்தொடர்பாளர் மருது அழகுராஜ், மதுரை மாவட்ட கல்வி அதிகாரி சாமிநாதன், மாவட்ட கழக அவைத்தலைவர் ஐயப்பன், மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி, கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், கல்லுப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, கள்ளிக்குடி ஒன்றிய கழக செயலாளர் மகாலிங்கம், பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் தமிழ்செல்வன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழரசன், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜஹாங்கீர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கராஜ பாண்டியன், மற்றும் உரப்பனூர் சாமிநாதன், டாக்டர் பாவடியான், பேராசிரியர்கள் மணிகண்டன், ராஜசேகர், கண்ணன், வேம்புலு ,ஜெனட் சங்கர், புலவர் சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர் 

அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது: 

கடந்த 2 வருடத்துக்கு முன்பு இந்த சென்டரை ஹைடெக்காக உருவாக்குவேன் என்று நான் கூறினேன் தற்போது அது நடந்தேறியுள்ளது முயற்சி என்பது எளிதான காரியமல்ல விடா முயற்சியால் தான் மாபெரும் வெற்றி பெற்றோம் கடந்த 30 ஆம் தேதி இங்கு அம்மா திருக்கோவில் திறப்பு விழா நடைபெற்றது அதில் ஏ.சி.டி குழும்பத்தைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பு சேர்த்தீர்கள் இது வழிபாட்டுத் தலமாக மட்டு மல்லாது சேவை மையமாக நாம் உருவாக்கி வருகிறோம் 

இந்த திருக்கோவில் ஆன்மீகம், நலவாழ்வு, நலத்திட்ட உதவி, வழி காட்டும் பயிற்சி மையம், அறிவுசார் மையம் என மாபெரும் கேந்திரமாக திகழ்ந்து இங்கு வரும் அனைவருக்கும் ஒளியேற்றும் மையமாக விளங்கும் இது தென் தமிழகத்தின் மிக வரப்பிரசாதமாக நிச்சயம் இது உருவாகும் 

புரட்சித்தலைவி அம்மா எப்படி செயல்பட்டு மக்களை காத்தாரோ அதே போல தான் தற்போது முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் உரையுடன் சட்டமன்றம் தொடங்கியது அரசின் செயல்திட்டத்தின் வடிவமாக கவர்னர் உரை இருந்தது இந்த 4 ஆண்டுகளில் 400 ஆண்டு கால சாதனை படைத்தவர் நமது முதலமைச்சர் ஆனால் இதையெல்லாம் மறைக்கும் வண்ணம் எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய் பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர் மக்கள் நலத்திட்டங்கள் எண்ணிப் பாராமல் ஆணவத்தின் உச்சமாக எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றனர் 

புரட்சித்தலைவி அம்மா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் திட்டங்களை அறிவிப்பார் அதன் மூலம் மக்களின் விதியை மாற்றிக் காட்டுவார் அதுபோலத்தான் இன்றைக்கு நமது முதலமைச்சரும் செய்திட்டு வரலாறு படைத்து வருகிறார்  

நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார் அதில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார் இதன்மூலம் ஏறத்தாழ 16 லட்சத்தி 43 ஆயிரம் விவசாயிகள் குடும்பத்தில் ஒளி விளக்கு ஏற்றி உள்ளார் முதலமைச்சர்  

தேர்தல் அறிக்கையில் கூட காலதாமதம் ஆகலாம் ஆனால் விவசாயிகள் கோரிக்கை வைக்காமல் கோரிக்கையை நிறைவேற்றி தந்து இதன் மூலம் விவசாயிகளின் காவலனாக முதலமைச்சர் திகழ்கிறார்  இந்தியாவிலேயே கருணை, துணிச்சல், அறிவு, நிர்வாகத்திறமை உள்ளிட்ட அத்தனை திறமைகளும் பெற்ற ஒரே முதலமைச்சர் நமது முதலமைச்சர் ஆவார்  அதுமட்டுமல்லாது தைத்திருநாளில் அனைவரும் இல்லங்களில் பொங்கல் பொங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு 2 கோடியே 6 லட்சம் குடும்பங்களுக்கு 2,500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கிய நமது முதலமைச்சர் நிச்சயம் அடுத்த பொங்கல் திருநாளில் பொங்கல் பரிசு வழங்க நீங்கள் நல் வாய்ப்பினை உருவாக்கித் தர வேண்டும் 

அது மட்டுமல்லாது இளைய சமுதாயம் வைத்த கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு உரிமையை நிலைநாட்ட போராடி அதன்மீது வழக்கு தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார் இதுபோன்று மக்களின் எண்ணங்களின் நனவாக்கி வரும் முதலமைச்சரை பற்றி நாடும் ஏடும் பாராட்டி வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்  அம்மா சேரிடபில் டிரஸ்ட் குழுமத்தில் இருக்கும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு தற்போது கணினி வழங்கப்பட்டு வருகிறது நீங்கள் அதன் மூலம் உலக விஷயங்களை உள்ளங்கையில் வைத்துக்கொள்ள முடியும்  அதுமட்டுமல்லாது திருமங்கலம் தொகுதியில் 324 கிராமங்களும், 27 நகராட்சி வார்டுகள், 30 பேரூராட்சி வார்டுகள் உள்ளன இதில் 2 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர் 

நீங்களெல்லாம் அம்மா அரசின் சாதனை திட்டங்களான எய்ம்ஸ் மருத்துவமனை, சாலைகள் மேம்படுத்தப்பட்ட பணிகள், 2000 மினி கிளினிக்குகள், மற்றும் கொரோனா காலத்திலும் அனைத்து வீடுகளுக்கும் காய்கறி தொகுப்புகள், அரிசி கோதுமை மேலும் மதுரை மாவட்டத்தில் 15 லட்சம் கபசுரக் குடிநீர் டப்பாக்கள் நாம் வழங்கியுள்ளோம் இதுபோன்ற சாதனைத் திட்டங்களை 250 நபர்களுக்கு ஒருவர் வீதம் என பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் வரும் தேர்தலில் திருமங்கலத்தில் மீண்டும் இரட்டை இலையை மலரச் செய்ய நீங்கள் பணியை மேற்கொண்டால் அடுத்த 5 ஆண்டுகளில் உங்கள் எண்ணம் எல்லாம் நனவாகும் என்று அவர் பேசினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து