முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் யானைகள் உற்சாகம்

திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மேட்டுப்பாளையம் : இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேட்டுப்பாளையம் வனப்பத்ர காளியம்மன் கோவில் பவானி ஆற்றுப்படுகையில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான யானைகள் புத்துணர்வு முகாம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 48 நாட்கள் இந்த முகாம் நடக்கிறது. அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

முகாமில் பங்கேற்க உள்ள யானைகள் அனைத்தும் நேற்று காலை முதலே தேக்கம்பட்டியில் உள்ள முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தன.

நேற்று மாலை வரை தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த 26 யானைகள் முகாமுக்கு வந்துள்ளன. முகாமுக்கு வந்த யானைகள் அனைத்தும் லாரியில் இருந்து இறங்கியதும் நீண்ட தூர பயணம் காரணமாக தண்ணீர் உள்ள குழாயை தேடி சென்று தங்களது தாகத்தை தீர்த்து கொண்டன. ஒரு சில கோவில் யானைகள் சந்தோ‌ஷ மிகுதியில் துதிக்கையால் மண்ணை அள்ளி தன் உடல் முழுவதும் மீது வீசி உற்சாகத்தை வெளிப்படுத்தின.

அதன் பின்னர் யானைகள் வனப்பத்ர காளியம்மன் கோவில் முன்பு அழைத்து செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் யானைகள் அனனத்தும் கலந்து கொண்டு துதிக்கையால் அம்மனை வழிபட்டன.

தொடர்ந்து யானைகள் முகாம் நடைபெறும் இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டன.

அங்கு சென்றதும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து கொண்டதால் ஒவ்வொரு யானைகளும் துதிக்கையால் கட்டித் தழுவி தங்களது அன்பை வெளிப்படுத்தின. முகாமில் பங்கேற்ற யானைகள் அனைத்தும் நேற்று  நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டன. பின்னர் சவரில் குளிக்க சென்ற யானைகள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளித்து மகிழ்ந்தன.

முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு காட்டு யானைகளால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக முகாம் நடைபெறும் இடத்தை சுற்றிலும் 3 அடுக்கு மின்வேலி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து