முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரியார் சுவாமிகள் குடும்பத்தினர் முதல்வர் எடப்பாடிக்கு நன்றி

புதன்கிழமை, 10 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக முதல்வரை வாரியார் சுவாமிகளின் குடும்பத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேலூர், அண்ணா கலையரங்கம் அருகில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்திலும் சைவத்தையும், தமிழையும் தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி பன்னூல்களையும் சுவைபட பொதுமக்களுக்கு சொற்பொழிவாற்றி, அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் சமூக நல்லிணக்கத்தை வளர்த்த பெருமைக்குரியவர் திருமுருக கிருபானந்தவாரியார். இவர் 1906-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் நாள் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காங்கேயநல்லூரில் பிறந்தார்.

இவர் 19-ம் வயது முதல் சமய, சமூக சொற்பொழிவுகளை ஆற்றத் தொடங்கி, அதன் மூலம் கிடைத்த வருவாயினை ஏழை, எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் திருமணம் ஆகிய மக்கள் நலம் சார்ந்த பணிகளுக்காக செலவிட்டார். இரண்டு புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களால் முனைவர் பட்டமும், இசைப் பேரறிஞர் பட்டமும், இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, இந்திய அரசால், இவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட சிறப்புக்குரியவர். எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தவர் கிருபானந்தவாரியார். அவரது நினைவாக அவர் பிறந்த ஆகஸ்ட் மாதம் 25-ம்  நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். 

அதனைத் தொடர்ந்து, வேலூரில் தங்கியிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் குடும்பத்தைச் சேர்ந்த வாரியார் சுவாமிகளின் சகோதரர் மகன் புகழனார், மருமகள் ஏலவார் குழலி, வாரியார் சுவாமிகளின் அக்காள் பேரன் சி.பி. பாபு மற்றும் குடும்பத்தினர் சந்தித்து, திருமுருக கிருபானந்தவாரியார் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின் போது அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சி. சண்முகம், வேலூர் மாவட்ட வேளாண் விற்பனைக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.கே. அப்பு ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து