முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 17-ம் தேதி முதல் 3 நாட்கள் தூத்துக்குடி, நெல்லை, தென்காசியில் முதல்வர் எடப்பாடி தீவிர பிரச்சாரம்: 6-ம் கட்டமாக சூறாவளி சுற்றுப்பயணம்

திங்கட்கிழமை, 15 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வரும் 17-ம் தேதி முதல் 3 நாட்கள் தனது 6-வது கட்ட சூறாவளி சுற்றுப்பயண பிரச்சாரத்தை தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். இதைத் தொடர்ந்து 5-வது கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அந்த வகையில் வரும் 17-ம் தேதி தனது 6-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் தொடங்குகிறார். இதன்படி வரும் 18, 19-ம் தேதிகளில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

17-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காலை 11.30 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ளும் முதல்வர் எடப்பாடி, 12 மணியளவில் திருச்செந்தூரில் மகளிர் குழுவினருடன் கலந்துரையாடுகிறார். அதை தொடர்ந்து 1.40 மணியளவில் ஓட்டப்பிடாரம் தொகுதி மாப்பிள்ளையூரணியில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொள்கிறார்.

அதை தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் தூத்துக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். 

அதை தொடர்ந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வரும் 18-ம் தேதி முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அன்றைய தினம் 10 மணியளவில் ராதாபுரம் தொகுதி வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

அதை தொடர்ந்து 11.40 மணியளவில் நாங்குநேரி தொகுதி, களக்காடு அருணா திருமண மண்டபத்தில் மகளிர் குழுவினருடனும், 01.05 மணியளவில் அம்பாசமுத்திரம் தொகுதி மேலச்செவல், பேரூராட்சி திருமண மண்டபத்தில் இளைஞர் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் முதல்வர் கலந்துரையாடுகிறார். அதை தொடர்ந்து மாலை 4 மணியளவில் ஆலங்குளம் ஏ.ஜே. மகாலில் பாசறை நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளுடன் முதல்வர் கலந்துரையாடுகிறார். அதை தொடர்ந்து மாலை 5.10 மணியளவில் தென்காசி தொகுதி பாவூர் சத்திரம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார்.

அதை தொடர்ந்து 6.30 மணியளவில் தென்காசி, இசக்கி மகாலில் மகளிர் குழுவினருடன் முதல்வர் கலந்துரையாடுகிறார். இந்நிகழ்ச்சிகளில் மண்டல பொறுப்பாளர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தச்சை என். கணேசராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். 

அதை தொடர்ந்து 19-ம் தேதி காலை 10 மணிக்கு கடையநல்லூர் பள்ளிவாசல் முன்பு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து 11.30 மணிக்கு வாசுதேவநல்லூர் தொகுதி புளியங்குடி கண்ணா திரையரங்க வளாகத்தில் மகளிர் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார்.

12.15 மணிக்கு சங்கரன்கோவில் வைஷ்ணவி மகாலில் பாசறை நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார். இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி மற்றும் நிர்வாகிகள், கட்சியின் முக்கிய பிரதிநிதிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து