எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் : அதிகாரத்தில் இல்லாத போதே அராஜகம் செய்கிறார்கள் தி.மு.க. ஒரு அடாவடி கட்சி, ரௌடித்தனம் செய்கிற கட்சி என்று பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி கடுமையாக தாக்கி பேசினார்.
ஸ்டாலின் சொல்வது அனைத்தும் பச்சைப்பொய். அம்மாவின் அரசு துறைதோறும் சாதனைகளை செய்து விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் கூறியதாவது:-
2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சி இருந்தபோது எப்போது கரண்ட் வரும், எப்போது கரண்ட் போகும் என்றே தெரியாது, அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள், தொழிற்சாலையும் பாதிக்கப்பட்டது. புரட்சித்தலைவி அம்மா 2011 -ல் தமிழ்நாட்டில் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது நான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்றே ஆண்டுகாலத்தில் தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.
மூன்றே ஆண்டு காலத்தில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கொடுத்து தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஒரே தலைவி புரட்சித்தலைவி அம்மா. அதே வழியில் வந்த அம்மாவின் அரசு திறமையான நிர்வாகத்தின் மூலமாக, உபரி மின்சாரத்தை உற்பத்தி செய்து, தமிழ்நாடு இப்போது மின்மிகை மாநிலமாக திகழ்ந்து, அதற்கும் நாங்கள் விருது வாங்கியிருக்கிறோம்.
தேசிய அளவில் உணவு தானிய உற்பத்தியை பெருக்கி தொடர்ந்து கிருஷி கர்மான் விருதை பெற்றுக் கொண்டிருக்கிறோம். போக்குவரத்துத் துறை, சமூகநலத் துறை, மருத்துவத் துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் விருது என பல துறைகளில் விருதுகளை குவிக்கின்ற அரசாங்கம் அம்மாவின் அரசாங்கம். தமிழ்நாட்டில் எந்த ஆட்சியிலும் இவ்வளவு விருதுகளை பெற்ற சரித்திரம் கிடையாது.
அந்த சரித்திரத்தையும் என் தலைமையில் இருக்கின்ற அம்மாவின் அரசு பெற்றிருக்கின்றது. ஆகவே ஸ்டாலின் சொல்வது அனைத்தும் பச்சைப் பொய். உண்மை என்ற வார்த்தையே அவர் வாயிலிருந்து வருவது கிடையாது. நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்து அதன் மூலமாக நன்மை பயக்கின்ற ஒரே அரசாங்கம் அம்மாவின் அரசாங்கம்.
ஆகவே ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். 2011 -ல் அம்மா தேர்தல் அறிக்கையில், நான் முதலமைச்சராக ஆனவுடன் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தார், சொன்னபடி அதைக் கொடுத்தார்.
தி.மு.க.வும் 2006-ஆம் ஆண்டு வாக்குறுதி கொடுத்தார்கள், என்ன ஆயிற்று? நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்னார்கள், இந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எவ்வளவு பேர் நிலம் வாங்கியிருக்கிறீர்கள்? 2 ஏக்கர் நிலம் கொடுக்க முடியுமா? எங்கு இருக்கிறது? எவ்வளவு பச்சைப் பொய், மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று பாருங்கள். இன்றைக்கு அடக்கம் செய்யவே நிலம் இல்லாதபோது எங்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பார்கள்? நிலம் கொடுக்காவிட்டால் போகிறது, மக்களிடத்திலிருந்து நிலத்தை தி.மு.க.-வினர் பிடுங்காமல் இருந்தாலே போதும். அப்படியிருந்தாலே மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக இருந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது, சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருந்தது. அப்பாவி மக்களிடம் நிலம் இருந்தால் தி.மு.க.-காரன் அடித்து பிடுங்கி விடுவான். இதற்காக அம்மா நிலம் அபகரிப்பு ஒழிப்பு என்ற பிரிவை தொடங்கி, அப்பாவி மக்களிடமிருந்து தி.மு.க.-காரர்கள் அபகரித்த நிலம் குறித்து விசாரித்து, அந்த உரிமையாளர்களுக்கு மீட்டுக் கொடுத்த அரசு அம்மாவின் அரசாங்கம்.
இன்றைக்குகூட ஆட்சி அதிகாரத்தில் அவர்கள் இல்லை, ஆனால் தி.மு.க. ஒரு அராஜக கட்சி, அடாவடி கட்சி, ரௌடித்தனம் செய்கிற கட்சி. ஆட்சி அதிகாரம் இல்லாதபோதே, ஓட்டலில் சென்று நன்றாக சாப்பிட்டுவிட்டு பில்லை கட்டாமல் மூக்கு மேல் குத்துகிறான். அடுத்த நாள் ஸ்டாலின் கட்ட பஞ்சாயத்து செய்ய செல்கிறார். பெரம்பலூரில் தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர், பெண்கள் அழகு நிலையத்தில் புகுந்து ஒரு பெண்ணை காலால் மிதிக்கிறார். செல்போன் கடைக்குச் சென்று செல்போன் வாங்கிவிட்டு, செல்போனுக்கு பணம் கேட்டால் உதைக்கிறார்கள்.
தேங்காய் கடைக்குச் சென்று தேங்காய் வாங்கிவிட்டு, அந்தப் பெண்மணி தேங்காய்க்குண்டான பணத்தைக் கேட்டால் அடிக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே இப்படி அட்டூழியம் செய்கிறார்களென்றால், ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் மக்களை நிம்மதியாக வாழ விடுவார்களா இவர்கள்? எனவே அது மோசமான கட்சி, அராஜக கட்சி, அவர்கள் ஆட்சிக்கு வரமுடியாது, வந்துவிட்டால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்பதை மட்டும் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா வழியிலே நடைபெறுகின்ற அரசு எங்களுடைய அரசு. ஒரு விவசாயி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்து கொண்டிருக்கின்றோம். மக்களோடு மக்களாக இருந்து மக்களின் எண்ணத்தை புரிந்து, மக்களின் குறைகளைத் தெரிந்து, அவர்களுக்கு ஏற்படுகின்ற கஷ்ட, நஷ்டங்களைப் புரிந்து எங்களுடைய அரசு திட்டம் தீட்டி, நாட்டு மக்களுக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறது. ஆகவே மீண்டும் அம்மாவினுடைய ஆட்சி தொடர, கழக வேட்பாளர் வெற்றிபெற, உங்கள் பொன்னான வாக்கினை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். என்று பேசினார்.
ஸ்ரீவைகுண்டத்தில் பிரச்சாரத்தை முடித்து கொண்டு திருச்செந்தூரில் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் முதல்வர் கலந்துரையாடினார்.
தொடர்ந்து பிற்பகலில் தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
பின்னர் மதியம் அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார்
09 Jan 2025சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் துவக்கி வைத்தார்.
-
இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: பொங்கல் தொகுப்பை வாங்க முடியாமல் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் ஏமாற்றம்
09 Jan 2025ஈரோடு: இடைத்தேர்தல் தேதி அறிவிப்பால் தேர்தல் நடத்தை விதிகள் அமல் ஆனதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பை வாங்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும்: உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு
09 Jan 2025சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்காக இன்று அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
-
குற்றங்களை கட்டுப்படுத்த நாம் தொழில்நுட்பங்களை வலுப்படுத்த வேண்டும்: தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் முதல்வர் பேச்சு
09 Jan 2025சென்னை, தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், குற்றங்களை கட்டுப்படுத்த நாம் தொழில்நுட்பங்களை வலுப்படுத்
-
நிதி நெருக்கடியால் பொங்கலுக்கு ரூ.ஆயிரம் வழங்க முடியவில்லை: சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
09 Jan 2025சென்னை, புயல், வெள்ள நிவாரணப் பணிகளை மாநில அரசு நிதி மூலம் மேற்கொள்ளப்பட்டதால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்க முடியவில்லை என
-
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்த உத்தவ் தாக்கரே
09 Jan 2025புது டெல்லி, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை தொடர்ந்து சிவசேனை (உத்தவ் அணி) கட்சியும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
-
ரூ.4.89 லட்சம் கோடி வரை பொருளாதார இழப்பு: கலிபோர்னியா காட்டுத்தீயை பேரிடராக அறிவித்த பைடன்
09 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸின் பல பகுதிகளிலும் காட்டுத்தீ விரைவாக பரவி வருகிறது.
-
திருப்பதியில் கூட்டநெரிசலில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
09 Jan 2025சென்னை, திருப்பதி கோவிலில் கூட்டநெரிசலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2025.
09 Jan 2025 -
சட்டசபையில் யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக முதல்வரின் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்: அ.தி.மு.க. ஆதரவோடு நிறைவேறியதாக சபாநாயகர் அறிவிப்பு
09 Jan 2025சென்னை, யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டசபையில் முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானம் அ.தி.மு.க.
-
திருப்பதி உயிரிழப்பு சம்பவம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
09 Jan 2025சென்னை, திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி
09 Jan 2025ஈரோடு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.
-
திருப்பதியில் 6 பேர் உயிரிழந்த சம்பவம்: விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட ரோஜா கோரிக்கை
09 Jan 2025திருப்பதி: திருப்பதியில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரோஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
-
திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
09 Jan 2025சென்னை, திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நம்பமுடியாத வேகத்தில் இந்தியாவின் வளர்ச்சி: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
09 Jan 2025புவனேஸ்வர், 21-ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருவதாகவும், உலகமே இன்று இந்தியா சொல்வதைக் கேட்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
40 தேஜஸ் போர் விமானங்கள் இன்னும் வந்து சேரவில்லை இந்திய விமானப்படை தளபதி கவலை
09 Jan 2025புதுடெல்லி: 40 தேஜஸ் போர் விமானங்கள் இன்னும் வந்து சேரவில்லை என்று கவலை தெரிவித்துள்ள இந்திய விமானப்படை தளபதி தளபதி ஏபி சிங், எண்ணிக்கை மற்றும் தொழில்நுட்பத்தில் அண்டை
-
தொலைபேசி மூலம் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை
09 Jan 2025திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசியால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டம்
09 Jan 2025புதுடில்லி, புதுடில்லியில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் 2-வது தொகுதியில் போட்டியிடப்போவதாக பா.ஜ.க.
-
தேர்தல் நேரத்தில் பரிசுத்தொகை: அமைச்சர் பேச்சால் சுவாரஸ்யம்
09 Jan 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகை குறித்து பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தருவது பற்றி பார்க்கலாம் என்று நகைச்சுவையாகப் பதி
-
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: வரும் 18-ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை
09 Jan 2025புதுடெல்லி, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி - 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்படு
-
மீண்டும் ஒரு சம்பவம்: குமரிக்கு கழிவுகளை ஏற்றி வந்த கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது
09 Jan 2025கன்னியாகுமரி, மீண்டும் ஒரு சம்பவமாக குமரிக்கு கழிவுகளை ஏற்றி வந்த கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
-
சட்டசபை தி.மு.க.வின் பொதுக்கூட்ட மேடையல்ல: இ.பி.எஸ். கண்டனம்
09 Jan 2025சென்னை, தமிழக சட்டசபை மக்களின் மேடை; தி.மு.க.வின் பொதுக்கூட்ட மேடையல்ல என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
09 Jan 2025சென்னை: பவானிசாகர் அணையில் இருந்து 12,000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இனி இ.பி.எஸ்.சின் நாடகம் மக்களிடத்தில் எடுபடாது: அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
09 Jan 2025சென்னை, இனி இ.பி.எஸ்.சின் நாடகம் மக்களிடத்தில் எடுபடாது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
தமிழர்களின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: முதல்வர்
09 Jan 2025சென்னை, தமிழர்களின் ஒன்றுபட்ட குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம் என்று யு.ஜி.சி.யின் புதிய விதிகள் தொடர்பாக முதல்