Idhayam Matrimony

டீசல் விலை உயர்வு: மார்ச் 15 முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு

வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

டீசல் விலை உயர்வைக் குறைத்திட வேண்டும், சுங்கச்சாவடிகளை முறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா தெரிவித்துள்ளார். 

தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று (பிப்.18) நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா கூறியதாவது:-

லாரி உரிமையாளர்கள் வாழ்வா, சாவா என்று வாழ்ந்து கொண்டு வரும் வேளையில், டீசல் விலை தினந்தோறும் கடுமையாக உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது. டீசல் விலையைக் கட்டுப்படுத்திட தமிழக அரசு 'வாட்' வரியைக் குறைக்க வேண்டும்.  15 ஆண்டுகள் ஆன வாகனங்களை அழிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவால், தென் மாநிலங்களில் 6 லட்சம் வாகனங்கள் பாதிக்கப்படும். பல சுங்கச்சாவடிகளின் காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். பாஸ்டேக் முறையினால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுங்கச்சாவடிகளில் தனியாகப் பணம் செலுத்திட ஏதுவாக ஒரு வழியைக் கொடுக்க வேண்டும். எங்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு, லாரி உரிமையாளர்களை அழைத்துப் பேச வேண்டும். கோரிக்கை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் மார்ச் 15-ம் தேதி, பெங்களூருவில் நடைபெறும் மாநாட்டில், தென்மாநில லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்வோம்.

மத்திய அரசு டீசல் விலையையும், மாநில அரசு 'வாட்' வரியையும் 15 நாட்களுக்குள் குறைக்க வேண்டும். கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு முன்பாக மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வரும் 26-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கோரிக்கை மனுவை அளிக்கவுள்ளோம். லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் மட்டுமல்ல, வணிகர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கவுள்ளனர். இவ்வாறு சண்முகப்பா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து