முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டுவளர்ச்சி துறை சார்பில் கோவை மாவட்டத்தில் குளிர்பதன அலகு : முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

புதன்கிழமை, 24 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  23.2.2021 அன்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்துறையின் கீழ் இயங்கும் பட்டு வளர்ச்சித் துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள பல்நிலை குளிர்பதன அலகு மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விற்பனை நிலையம், தொழிற்கூடம் மற்றும்  சுற்றுசுவருடன் கூடிய தேன்பொத்தை மற்றும் இலஞ்சி மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்க தொழிற்கூடங்கள்  ஆகியவற்றை திறந்து வைத்தார்.  

தமிழக முதல்வர், கடந்த 14.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு, தேசிய அளவில் வெண்பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.   தமிழ்நாட்டில் தலா 20 லட்சம் பட்டு முட்டைகளை பதனம் செய்யும் திறன் கொண்ட இரண்டு பல்நிலை குளிர் பதன அலகுகள் கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூரிலும், கிருஷ்ணகிரியிலும் செயல்பட்டு வருகின்றன.  வெண்பட்டு முட்டை உற்பத்தியினை அதிகரித்து அதனை பதனப்படுத்திட, மேலும் 20 லட்சம் பட்டு முட்டைகளைப் பதனம் செய்யும் திறன் கொண்ட ஒரு பல்நிலை குளிர்பதன அலகு  ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும் என்று அறிவித்தார். 

அந்த அறிவிப்பிற்கிணங்க, கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டம், சின்னவேடம்பட்டியில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள  20 லட்சம் வெண்பட்டு முட்டைகளை பதனம் செய்யும் திறன் கொண்ட பல்நிலை குளிர்பதன அலகினை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இந்த அலகில், கூடுதலாக 20 லட்சம் வெண்பட்டு முட்டை தொகுதிகள் பதனம் செய்து ஆண்டுதோறும் விநியோகிப்பதன் மூலம் கூடுதலாக 3000 முதல் 5000 பட்டு விவசாயிகள் பயன்பெற இயலும். மேலும், அரசு வித்தகங்களில் உற்பத்தி செய்யப்படும் வெண்பட்டு முட்டைகளை தமிழ்நாட்டிலேயே பதனம் செய்து பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதன் மூலம் வெளி மாநிலங்களிலிருந்து வெண்பட்டு முட்டைகள் பெறப்படுவதை குறைக்க இயலும்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய கட்டுப்பாட்டில் செயல்படும் தென்காசி மாவட்டம்,  செங்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள தேன்பொத்தை மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கத்தின் பழைய தொழிற்கூடங்களை இடித்து, அவ்விடத்தில் 5,500 சதுர அடியில் 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள விற்பனை நிலையம், தொழிற்கூடம் மற்றும் சுற்றுசுவருடன் கூடிய தேன்பொத்தை மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்க தொழிற்கூடம் மற்றும் தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் அமைந்துள்ள இலஞ்சி மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கத்தின் பழைய தொழிற்கூடங்களை இடித்து, அவ்விடத்தில் 2,725 சதுர அடியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொழிற்கூடம் மற்றும்  விற்பனை நிலையத்துடன் கூடிய இலஞ்சி மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்க தொழிற்கூடம் ஆகியவற்றை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.     

இப்புதிய தொழிற்கூடங்களில், மண்பானைகள், பூந்தொட்டிகள், சமையல் பாத்திரங்கள், பொம்மைகள் போன்றவற்றை தொழிலாளர்கள் மழைக்காலங்களில் சிரமமின்றி உற்பத்தி செய்யவும், முடிவுற்ற பொருட்களை இருப்பு வைத்து ஆண்டுதோறும் விற்பனை செய்யவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பா.பென்ஜமின், ஜி. பாஸ்கரன், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், பட்டுவளர்ச்சித் துறை இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் சாந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து