முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறுபிறவி எடுத்தேன்: சட்டசபையில் அமைச்சர் காமராஜ் உருக்கமான பேச்சு

சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மறுபிறவி எடுத்து இங்கு வந்திருக்கிறேன் என்று சட்ட சபையில் நா தழுதழுக்க உருக்கமாக அமைச்சர் காமராஜ் கூறினார்.

தமிழக சட்டமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தில் பதிலளிக்கும்போது அமைச்சர் காமராஜ் பேசுகையில்,

நான் இந்த சபையில் மீண்டும் வருவேனா பேசுவேனா என நினைத்தேன். 5-ம் தேதி எனக்கு கொரேனாவிலிருந்து பூரண குணம் ஏற்பட்டது.  அது பின்பு மீண்டும் 19-ம் தேதி மிக அதிகமாக பாதிப்புக்குள்ளானது. இதை கேள்விப்பட்ட முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களும் எனக்கு தேவையான உதவிகளை செய்து என்னை காப்பாற்றி உள்ளனர். நான் இறைவன் அருளால் உயிர் பிழைத்து வந்துள்ளேன். 

சுகாதாரத்துறை அமைச்சர் சொன்னது போல் நான் மறுபிறவிதான் எடுத்து வந்துள்ளேன். இந்த நேரத்தில் என் உயிரை காப்பாற்ற உதவிய அனைவருக்கும் பாதம் பணிந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என் சந்ததியும் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறது என பேசினார். 

இதையடுத்து பேசிய சபாநாயகர் தனபால், அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு இந்த சபைக்கு வந்ததுள்ளார். அவர் பல்லாண்டு வாழ வேண்டும். அவருக்கு அம்மாவின் ஆசியும் முதல்வர் பாசமும், துணை முதல்வர் நேசமும் என்றும் இருக்கும் என பாராட்டினார்.

மேலும் சபையில் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கும்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடங்கி விட்டதால் விதிகளுக்கு உட்பட்டு பதில் கூற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  இதனால் அமைச்சர்கள் கேள்விகளுக்கு பதில் கூறும் போது உறுப்பினரின் கேள்வி துறைக்கு அனுப்பப்படும் என பதிலளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து