முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியின் விலை ரூ. 250 : மத்திய அரசு முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தனியார் ஆஸ்பத்திரிகள் ஒரு டோசுக்கு ரூ.250 வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  கடந்த மாதம் 16-ம் தேதி இந்த தடுப்பூசிகளை போடும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கும், 2 கோடி முன்கள பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், கடந்த 24-ம் தேதியன்று, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை  கூட்டத்தில், தடுப்பூசி திட்டத்தின் 2-வது கட்டத்தை மார்ச் 1-ம் தேதி (இன்று) தொடங்குவது எனவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட வியாதிகளுடன் போராடும் 45-59 வயதானவர்களுக்கும் தடுப்பூசி போடுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த தடுப்பூசியை அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாகவும், தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் செலுத்தியும் போட்டுக் கொள்ளவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

தடுப்பூசிகளுக்கு தனியார் ஆஸ்பத்திரிகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கும் என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடனும், தனியார் ஆஸ்பத்திரிகளுடனும் கலந்து ஆலோசித்து மத்திய சுகாதார அமைச்சகம் 3 அல்லது 4 நாளில் அறிவிக்கும் என்றும் மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் தடுப்பூசி போடுவதற்கு தனியார் ஆஸ்பத்திரிகள் ஒரு டோசுக்கு ரூ.250 வரை கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.  இதுபற்றி அந்த வட்டாரங்கள் கூறும் போது, 

தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடுவதற்கு ரூ.250 கட்டணம் என்பது அதிகபட்ச தொகையாக இருக்கும். ஒரு தடுப்பூசியின் விலை ரூ.150, ரூ.100 சேவை கட்டணம். இது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிற வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவித்தன. இது பற்றி மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து