முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18 மணி நேரத்தில் 25 கி.மீ. சாலை: லிம்கா சாதனை புரிந்த கர்நாடகம்: மத்திய அமைச்சர் கட்காரி பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : கர்நாடகத்தின் விஜயாப்புரா மாவட்டத்தில் 18 மணி நேரத்தில் 25 கி.மீ. சாலை அமைத்த சாதனை நிகழ்வு லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தில் இருந்து மராட்டிய மாநிலம் சோலாப்பூருக்கு 110 கிலோ மீட்டருக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 4 வழிச்சாலை அமைக்கும் பணியில் விஜயாப்புராவில் இருந்து 25.54 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலையை 18 மணி நேரத்தில் அமைத்து தொழிலாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்த சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், 25 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலையை 18 மணி நேரத்தில் அமைத்து முடிக்க 500 தொழிலாளர்களை பயன்படுத்தி இருந்தது. இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, லிம்கா புத்தகத்தில் இடம் பிடித்துள்ள இந்த சாதனையை மத்திய அமைச்சர் கட்காரி பாராட்டியுள்ளார். 

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் கட்காரி தனது டுவிட்டர் பதிவில், விஜயாப்புரா - சோலாப்பூர் இடையிலான 4 வழிச்சாலை அமைக்கும் பணியில் 25.54 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையை 18 மணி நேரத்தில் அமைத்து சாதனை படைத்த தொழிலாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். விஜயாப்புராவில் இருந்து சோலாப்பூருக்கு 110 கிலோ மீட்டர் தூரம் வரை அமைய உள்ள நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் இந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து