முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை கூட்டத்தில் சட்டையை கழற்றினார்: கர்நாடக காங். எம்.எல்.ஏ. ஒருவாரம் சஸ்பெண்ட்

வெள்ளிக்கிழமை, 5 மார்ச் 2021      இந்தியா
Image Unavailable

கர்நாடக சட்டசபை கூட்டத்தில் சட்டையை கழற்றிய சங்கமேஸ்வர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பெங்களூரு விதான்சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் காகேரி, ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்த விவாதத்தை தொடங்கி வைத்து அவர் பேச ஆரம்பித்தார்.  இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சபாநாயகருக்கு எதிராகவும், பா.ஜ.க.வுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். சபாநாயகர் ஆர்.எஸ்..எஸ். அமைப்பின் கைப்பாவையாக செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

காங்கிரஸ் உறுப்பினர்களின் கடும் கூச்சல்-குழப்பத்திற்கு மத்தியில் சபாநாயகர் காகேரி தனது அச்சிடப்பட்ட புத்தக உரையை வாசித்து முடித்தார். அதைத் தொடர்ந்து, பேசிய காகேரி, இந்த விஷயம் குறித்து விவாதிக்க காங்கிரசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் பேசுகையில், இந்த ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க முதல்வர், எதிர்க்கட்சி தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.  இந்த விவாதத்தில் பங்கேற்று பேச காங்கிரஸ் தரப்பில் 19 உறுப்பினர்களின் பெயர் பட்டியல் என்னிடம் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது திடீரென இந்த விவாதத்திற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல என்றார். ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியபடி இருந்தனர்.

அப்போது தர்ணாவில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒருவரான பத்ராவதியை சேர்ந்த சங்கமேஸ்வர் திடீரென தனது சட்டையை கழற்றி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு சபாநாயகர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முதல்வர் எடியூரப்பாவும் தனது ஆட்சேபனையை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சபையை 15 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக சபாநாயகர் காகேரி அறிவித்தார். சபை ஒத்திவைப்புக்கு பிறகு மீண்டும் சட்டசபை கூடியபோது, சபாநாயகர் காகேரி, காங்கிரஸ் உறுப்பினர் சங்கமேஸ்வர் அவையில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டார். இதை சகித்துக் கொள்ள முடியாது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கருத்துக்கூற வேண்டும் என்றார்.

அப்போது பேசிய பசவராஜ் பொம்மை, சபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட உறுப்பினர் சங்கமேஸ்வர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதைத்தொடர்ந்து காகேரி பேசுகையில், உறுப்பினர் சங்கமேஸ்வர் வருகிற 12-ம் தேதி வரை 7 நாட்கள் இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து