முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்: பாராளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 7 மார்ச் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்றத்தின் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று 8-ம் தேதி மீண்டும் கூடுகிறது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தொடரின் முதற்கட்ட கூட்டம் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து, அதற்கு நிதி அமைச்சரும் பதிலளித்து விட்டார். இதைத்தொடர்ந்து பட்ஜெட் தொடரின் முதற்கட்டகூட்டம் பிப்ரவரி 13-ம் தேதியுடன் நிறைவடைந்தது. 

இந்தநிலையில் பட்ஜெட் தொடரின் 2-ம் கட்ட கூட்டம் இன்று (மார்ச்) 8-ந் தேதி மீண்டும் கூடுகிறது.   4 மாநில மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்தக் கூட்டம் கூடுகிறது.

இதனால், குறிப்பிடத்தக்க தலைவர்கள் கூட்டத் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 8-ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், மின்சார சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

முன்னதாக பாராளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 29-ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது.

இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. முதற்கட்ட கூட்டம் ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும், 2-ம் கட்ட கூட்டம் மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து