முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்ட் 1 ந்தேதி ‘நீட்’ தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சனிக்கிழமை, 13 மார்ச் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

டெல்லி : மருத்துவப் படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 1 ந் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட் ‘ என்னும் பொது நுழைவுத் தேர்வு 2013 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தாண்டு ஆகஸ்ட் 1 ந் தேதி ‘நீட்’ தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

வழக்கமாக மே மாதத்தில் நடைபெற்று வந்த நீட் தேர்வு, தற்போது கொரோனா தொற்று காரணமாக ஆகஸ்ட் 1 ந் தேதியில் நடைபெறுகிறது. ‘நீட்’ நுழைவுத்தேர்வு ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் ஒரே கட்டமாக நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வில் வழக்கமாக ‘நீட்’ தேர்வுக்குக் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்படும். மேலும் இந்த தேர்வு குறித்து தெரிந்து கொள்ள https://nta.ac.in அல்லது https://ntanett.nic.in ஆகிய இணையதளங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டைப் போல, இந்தாண்டும் கோவிட்-19 வழிகாட்டுதல்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படும். கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் ஒரு அறையில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவப் படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு நடைபெறும் என்றும், 2021 ஆம் ஆண்டு முதல் பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி லைஃப் சையின்ஸ் படிப்புகளுக்கும் இனி ‘நீட்’ தேர்வு முடிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து