முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் ரங்கசாமிக்கு எதிராக வேட்பாளரை தேடும் காங்கிரஸ்

புதன்கிழமை, 17 மார்ச் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : புதுவையில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

15 தொகுதிகளில் காங்கிரஸ், போட்டியிடுவது என ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஏனாமை தவிர்த்து 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஏனாம் தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை.

காங்கிரசில் அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணா ராவ் பதவியை ராஜினாமா செய்து என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார். ஏனாமில் ரங்கசாமி போட்டியிடுவார் என அறிவித்த மல்லாடி பிரசாரம் செய்து வருகிறார். 

ஏனாமில் ரங்கசாமிக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் வேட்பாளரை தேடி வருகின்றனர். கடந்த காலங்களில் புதுவை காங்கிரசுக்கு ஏனாம், மாகி கை கொடுக்கும் தொகுதிகளாக இருந்தது. மாகி தொகுதியில் முன்னாள் அமைச்சர் வல்சராஜ் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.

மார்க்சிஸ்டு ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என வல்சராஜ் அறிவித்துள்ளார். இதனால் மாகி தொகுதியில் வட்டார காங்கிரஸ் தலைவர் வேட்பாளராக களம் இறங்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக மார்க்சிஸ்டு ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் போட்டியிடுகிறார்.

இதனால் மாகி தொகுதியிலும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏனாம், மாகியில் நீண்டகாலமாக காங்கிரஸ் எளிதில் வெற்றி பெற்று 2 தொகுதிகளை தந்தது. தற்போது 2 தொகுதிகளும் கை நழுவியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 21 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 21 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 23 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 23 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 21 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து