முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவேக் மறைவு: நடிகர், நடிகைகள் இரங்கல்

சனிக்கிழமை, 17 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் நேற்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். 

நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டரில், சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு . வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்! என்று தனது இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்.  

நடிகர் கெளதம் கார்த்திக் தனது டுவிட்டரில், இதை நம்ப முடியவில்லை. அவர் நம்மை சிரிக்க வைத்தார், அவர் தனது நடிப்பின் மூலம் எங்களுக்குக் கல்வி கற்பித்தார், இந்த உலகத்தை கவனித்து, அதை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பதைக் கற்பிக்க உதவினார். உங்களைப் போல இன்னொருவர் இருக்க மாட்டார் ஐயா .நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம். சாந்தியடைய வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டரில், மாபெரும் கலைஞனே..மனம் உடைந்து போனேன். பெரிய இழப்பு. என்ன நடக்கின்றது? என்று அவர் பதிவிட்டுள்ளார்.  இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது டுவிட்டரில், “நொறுங்கியது !! நம் காலத்தின் மிகப் பெரிய நகைச்சுவை நடிகர் இனி இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது !! உங்களை எப்போதும் இழந்துவிட்டோமே” என்று அவர் பதிவிட்டுள்ளார்.  எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார், திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் என்று இயக்குநர் சேரன் தெரிவித்தார். 

நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்லாது, சமூகத்திற்கே பேரிழப்பு என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். சமூக செய்தியை தனது நகைச்சுவை நடிப்பு மூலம் இணைத்த சமகால சிறந்த நடிகர் விவேக் என்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார். 

மனிதகுல முன்னேற்றத்திற்காக நீங்கள் செய்த நல்ல காரியங்களுக்கும் மிக்க நன்றி நடிகை நஸ்ரியா தெரிவித்துள்ளார். நல்ல மனிதர் விவேக், விவேக் நல்ல நடிகர் மட்டுமல்ல; நல்ல மனிதர். அவரை நாம் இழந்து விட்டோம் என்று நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் மயில்சாமி, ஆனந்தராஜ், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து