முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிக்க 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம்: அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம்

திங்கட்கிழமை, 26 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிக்க 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக எத்தகைய முடிவை எடுக்கலாம் என்பது பற்றி தீர்மானிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டனர். தி.மு.க சார்பில் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, பா.ஜ.க. சார்பில் முருகன், கே.டி.ராகவன், காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, ஜெயக்குமார் பங்கேற்றனர்.

பா.ம.க. சார்பில் துணை பொதுச்செயலாளர் ராதா கிருஷ்ணன், தே.மு.தி,க. சார்பில் பாலாஜி, அன்புராஜ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாலகிருஷ்ணன், சவுந்தரராஜன், இந்திய கம்யூ. கட்சி சார்பில் முத்தரசன், வீரபாண்டியன் பங்கேற்றனர். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உள்துறை செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி. திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்தர் ரெட்டி, அதுல்ய மிஸ்ரா, பொதுத்துறை செயலாளர் செந்தில் குமார் உள்பட உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

கூட்டத்தில் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ள யோசனை குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களின் கருத்துக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டு அறிந்தார்.

ஒவ்வொரு கட்சி சார்பிலும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., கம்யூனிஸ்டு, தே.மு.தி.க. கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இதில் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை மிகவும் அவசியமாகிறது. ஆனால் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் மிகவும் வேதனை தருவதாக உள்ளது.

இந்த காலகட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அரசு அனுமதிக்கலாம். அதுவும் 4 மாதத்திற்கு மட்டும் தற்காலிகமாக ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம். இதை கண்காணிப்பதற்கு உள்ளூர் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது ஆலையை திறப்பது அரசின் நோக்கம் அல்ல. ஆனால் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் ஒவ்வொரு ஆஸ்பத்திரிக்கும் தட்டுப்பாடின்றி தேவைப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க யோசனை வழங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் அது பற்றியும் பரிசீலிக்க வேண்டி உள்ளது. ஆலையை திறப்பது அரசின் நோக்கம் கிடையாது. ஆனாலும் 4 மாதத்துக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்ற உங்களது கோரிக்கைதான் எங்களது யோசனையாகவும் உள்ளது என்றார்.

அவ்வாறு ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கும்போது அதை உள்ளூர் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து கண்காணிக்கலாம் என்று அனைத்து கட்சி தலைவர்களும் வலியுறுத்தினார்கள். அதையும் முதல்வர் ஏற்றுக்கொண்டார்.

ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதத்துக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க தற்காலிகமாக அனுமதிப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு கட்சி சார்பிலும் கேட்டுக் கொண்டனர். அதற்கும் அரசின் சார்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

கண்காணிப்பு குழுவில் உள்ளூர் பிரதிநிதிகளுடன், தூத்துக்குடி கலெக்டர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களும் இடம் பெற வேண்டும். அவர்கள் முழுமையாக தொழிற் சாலையை கண்காணிக்க வேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் உடனடியாக அட்வகேட் ஜெனரல் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து