எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தடுப்பூசி தொழில் நுட்பங்களை பகிர வேண்டும் எனவும், தடுப்பூசியில் தேசியவாதம் இருக்க முடியாது எனவும் உலக நாடுகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் கருத்தரங்கு ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மெய்நிகர் முறையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
தடுப்பூசி அடிப்படையிலான தொழில்நுட்பங்களை பகிர்வதற்கு உலக நாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் டிரிப்ஸ் ஒப்பந்தத்தை நாம் அணுக வேண்டும். தடுப்பூசியில் தேசியவாதம் இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் நாடுகள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும். கொரோனாவை கையாளுவதற்கு உலகளாவிய பலதரப்பு அணுகுமுறைகளை கொண்டிருக்க வேண்டிய அவசியம் உள்ளது. திறந்த தன்மை, வெளிப்படைத்தன்மை, நேர்மை, நிலைத்தன்மை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய கொள்கைகளின் அடிப்படையில் கொரோனாவுக்கு பிந்தைய எதிர்காலம் இருக்க வேண்டும். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பொருளாதாரத்தின் சக்கரங்களை இயங்க வைப்பதற்காக பல்வேறு துறைகளுக்கு நிதி உதவியை அரசு வழங்கியது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் நிலையில், இந்த கொரோனா காலத்தில் இந்த துறைகளுக்கு உதவுவதற்காக ரூ.3 லட்சம் கோடி கடன் உத்தரவாத அடிப்படையில் அரசு நிதி உதவிகளை வழங்கியுள்ளது. பருவநிலை மாற்றத்தை பொறுத்தவரை, பாரீஸ் ஒப்பந்த அடிப்படையிலான அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதில் இந்தியா உறுதிப்பாட்டுடன் உள்ளது. அவற்றை நிறைவேற்றுவது நிச்சயமாகவே நல்லது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |