முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் 23-வது முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார்: கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்: அமைச்சர்களும் பதவியேற்பு

வெள்ளிக்கிழமை, 7 மே 2021
Image Unavailable

சென்னை ராஜ்பவனில் எளிமையான முறையில் நடந்த விழாவில் தமிழகத்தின் 23-வது முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. அதை தொடர்ந்து சட்டமன்ற தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.   தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத் தொடர்ந்து முதல்வராக மு.க.ஸ்டாலினை பதவி ஏற்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. பதவியேற்பு விழாவில் அ.தி.மு.க. சார்பில் ஓ பன்னீர்செல்வம், தனபால் ஆகியோர் பங்கேற்றனர். காலை 9 மணியளவில் கவர்னர் மாளிகை வந்த மு.க ஸ்டாலின், கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். பின்னர்,  அமைச்சர்களை கவர்னருக்கு மு.க ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து,  தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. 

 இதன்பின்னர், தமிழக முதல்வராக  மு.க ஸ்டாலின் பதவியேற்றார்.  முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... எனக்கூறி மு.க ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மு. க ஸ்டாலினுடன்  அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 

இந்நிகழ்வில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கோபண்ணா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, பா.ஜ.க.  மூத்ததலைவர் இல.கணேசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கொங்கு நாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், முஸ்லிம் லீக் முன்னாள் எம்.எல்.ஏ. அபுபக்கர், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, ஆற்காடு வீராசாமி, ஐபேக் நிறுவனத் தலைவர் பிரசாந்த் கிஷோர், உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி, கவிஞர் வைரமுத்து, மற்றும் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் மற்றும் அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். கவர்னரின் தேநீர் விருந்திலும் முதல்வர் கலந்து கொண்டார்.

இதன்பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்களுடன் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார். அங்கு, தி.மு.க. தொண்டர்கள் பலரும் சூழந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், வீட்டுக்குள் சென்று தன் தாயார் தயாளு அம்மாளிடம் முதல்வர் ஆசி பெற்றார். பின்னர், தன் தந்தையும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி ஆசி பெற்றார். அப்போது, உணர்ச்சிப்பெருக்கால் ஸ்டாலின் கண்கலங்கினார்.  பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று முதல்வர் மு.க ஸ்டாலின்  மரியாதை  செலுத்தினார். இதையடுத்து, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்ற ஸ்டாலின், பெரியார் நினைவிடத்தில்  மரியாதை செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து