முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் ஹாக்கி போட்டி: மீண்டும் வரலாறு படைக்குமா இந்தியா ?

ஞாயிற்றுக்கிழமை, 9 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா நிகழ்த்திய சாதனைகளை மற்றொரு நாடு நிகழ்த்த இனியொரு யுகம் வேண்டும் என்றே சொல்லலாம்.

பெருசக்தியாக...

ஒலிம்பிக் ஹாக்கியில் அரை நூற்றாண்டு இந்தியா கொடி கட்டிப் பறந்திருக்கிறது. 1928-ம் ஆண்டு நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி தொடங்கி 1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி வரை 52 ஆண்டுகள் ஹாக்கி விளையாட்டியில் பெருசக்தியாக ஜொலித்திருக்கிறது இந்தியா. 

8 தங்கப்பதக்கங்கள்...

இந்த காலகட்டத்தில் 8 தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறது இந்திய அணி, 1960-ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும், 68, மற்றும் 72-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கங்களையும் வென்றது இந்திய அணி.

41 ஆண்டுகளாக...

கடைசியாக ஹாக்கியில் இந்தியா ஒலிம்பிக் பதக்கத்தை வென்றது 1980-ல். தமிழகத்தை சேர்ந்த வாசுதேவன் பாஸ்கரன் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றது. இதன்பின்னர் 41 ஆண்டுகளாக இந்தியாவின் பதக்க கனவு என்பது கானல் நீராகவே உள்ளது. 

ஐந்தாவது இடத்தில்...

டோக்யோ ஒலிம்பிக்கில் ஆடவர், மகளிர் ஆகிய இரு பிரிவுகளிலும் கலந்து கொள்ள இந்திய அணி தகுதிபெற்றுவிட்டது. சர்வதேச தரநிலையில் இந்திய அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. பெல்ஜியம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. 

மகளிர் ஹாக்கி...

6-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா, 7-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து, 8-வது இடத்தில் உள்ள நியுசிலாந்து, ஒன்பதாவது இடத்தில் உள்ள ஸ்பெயின் ஆகிய அணிகளும் சர்வதேச அளவில் சவால் நிறைந்ததாகவே உள்ளன. மகளிர் ஹாக்கியில் இந்திய அணி சர்வதேச அளவில் 9-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து