முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 95 இந்திய வீரர், வீராங்கனைகள் 12 பிரிவுகளில் விளையாட தகுதி

சனிக்கிழமை, 15 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. இதில் மொத்தம் 95 இந்திய வீரர், வீராங்கனைகள் 12 பிரிவுகளில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

தள்ளிவைப்பு

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடந்தது. 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

ஜப்பான் முடிவு

இதற்கிடையில் அந்நாட்டில் நடந்த சர்வே ஒன்றில், 58 சதவீதம் பேர் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டாம் என்று தெரிவித்து உள்ளனர். எனினும் கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு சர்வதேச பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்காமல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது.  பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24-ம்தேதி தொடங்கி செப்டம்பர் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளன.

ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை 95 இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் 12 விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொள்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

வில்வித்தை: 

ரீகர்வ் தனிநபர் பிரிவில் தருண்தீப் ராய், அட்டானு தாஸ், பிரவீன் ஜாதவ் பங்கேற்பு. அணிகள் பிரிவில் இவர்கள் கூட்டாக கலந்து கொள்வார்கள். மகளிர் தனிநபர் ரீகர்வ் பிரிவில் தீபிகா குமாரி பங்கேற்பு.

தடகளம்:

நீரஜ் சோப்ரா, சிவ்பால் சிங் ( ஈட்டி எறிதல்), பாவ்னா, பிரியங்கா கோஷ்வாமி (மகளிர் 20 கி.மீ நடை பந்தயம்), இர்பான் தோடி , ராகுல் , சந்தீப் குமார் (20 கி.மீ. நடைபந்தயம்), முகமது அனாஸ், வி.கே.விஷ்மயா, நிர்மல் நோவா, ஜிஷ்னா மேத்யூ (4ஜ்400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம்), அவினாஷ் சேபிள் (3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்)

எம்.ஸ்ரீசங்கர் ( நீளம் தாண்டுதல்), கமல்பிரீத் கவுர் (மகளிர் வட்டு எறிதல்).

குத்துசண்டை: 

சதீஷ் குமார் (91 கிலா), ஆஷிஸ் குமார் (74 கிலோ), லோவ்லினா போர்கோஹெய்ன் (மகளிர் 69கிலோ), விகாஷ் கிருஷ்ணன் ( 69 கிலோ), பூஜா ராணி (மகளிர் 75 கிலோ), அமித் பங்கால் ( 52 கிலோ), மேரி கோம் (மகளிர் 51 கிலோ), சிம்ரன்ஜி (மகளிர் 60 கிலோ), மணீஷ் கவுசிக் (63 கிலோ).

குதிரையேற்றம்: 

பவுத் மிர்சா ( தனிநபர் பிரிவு)

வாள்வீச்சு: 

பவானி தேவி (மகளிர் சேபர்)

ஜிம்னாஸ்டிக்: 

பிரணதி நாயக் (மகளிர் ஆர்ட்டிஸ்டிக்)

ஹாக்கி: 

ஆண்கள், பெண்கள் அணி.

துடுப்பு படகு: 

அர்ஜுன் லால் ஜத், அர்விந்த் சிங் ( லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ்).

பாய்மரபடகு: 

நேத்ரா குமணன் (மகளிர் லேசர் ரேடியல்), விஷ்ணு சரவணன் (லேசர் ஸ்டாண்டர்டு), கே.சி.கணபதி, வருண் தாக்குர் (ஸ்கீப் 49இஆர்).

துப்பாக்கிச் சுடுதல் (தனிநபர் பிரிவு): 

அஞ்சும் மவுத்கில், தேஜஸ்வினி சாவந்த், அபூர்வி சண்டிலா, இளவேனில் , மனு பாகர், ய‌ஷஸ்வினி தேஸ்வால், ராகி சர்னோபாத், திவ்யானேஷ் பன்வார், சஞ்ஜீவ் ராஜ்புத், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, தீபக் குமார், அங்கத் வீர் சிங் பஜ்வா, மைராஜ் அகமது கான்.

துப்பாக்கிச் சுடுதல் (கலப்பு அணிகள் பிரிவு): 

திவ்யானேஷ் சிங் பன்வார், இளவேனில் மற்றும் தீபக் குமார், அஞ்சும் மவுத்கில். சவுரப் சவுத்ரி, மனு பாகர் மற்றும் அபிஷேக் வர்மா, ய‌ஷஸ்வினி சிங் தேஸ்வால்.

டேபிள் டென்னிஸ்: 

சரத் கமல், சத்யன் ( ஒற்றையர்), மணிகா பத்ரா சுதிர்தா முகர்ஜி (மகளிர் ஒற்றையர்). சரத்கமல், மணிகா பத்ரா (கலப்பு இரட்டையர் பிரிவு).

மல்யுத்தம்: 

ரவி தகியா, பஜ்ரங் புனியா, தீபக் புனியா, வினேஷ் போகத், அன்ஷு மாலிக் (மகளிர் 57 கிலோ), சோனம் மாலிக் (மகளிர் 62 கிலோ), சுமித் மாலிக் (125 கிலோ), சீமா பிஸ்லா (மகளிர் 50 கிலோ).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 min ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 18 min ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து