முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 21 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 7 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம், வட கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என தெரிவித்து உள்ளது. 

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால், அடுத்த 24 மணி நேரத்தில், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  மேலும், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று 22-ம் தேதி தமிழகம் புதுச்சேரி காரைக்கலில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், நாளை 23 கடலோர மாவட்டங்கள், நீலகிரி, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிதமான மழையும், 24-ம் தேதி  மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், 25-ம் தேதி தேனி, திண்டுக்கல், தென்காசி மாவடடங்களில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

வட கடலோர மாவட்டங்களில் 2-ல் இருந்து 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். தென் தமிழக கடற்பகுதி, மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க்கடல்,தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் சேத்தியாத்தோப்பில் 10 செ.மீ., மூங்கில் துறைப்பட்டு 9 செ.மீ., அரியலூரில் 8 செ.மீ., தியாகதுருகத்தில் 7 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து