முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

“யாஸ் புயல்” எதிரொலி: 25 ரெயில்கள் தற்காலிகமாக ரத்து : கிழக்கு ரெயில்வே அறிவிப்பு

திங்கட்கிழமை, 24 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வங்கக் கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் காரணமாக, 25 ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 

கிழக்கு-மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது நேற்று மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், பின்னர் அதிதீவிர புயலாகவும் மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா-வங்காளதேசம் இடையே 26ம் தேதி கரையை கடக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் யாஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நகரங்களில் இருந்து செல்லும் ரெயில்களின் சேவையை நேற்று முதல் வரும் 29ஆம் தேதி வரை கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது. 

இதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு நியூ ஜல்பைகுரி செல்லும் ரெயில், தாம்பரத்தில் இருந்து நியூ தின்சுகியா செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 

இதேபோன்று, பெங்களூரு, எர்ணாகுளம், திருவனந்தபுரம், கவுகாத்தி, பூரி, பாட்னா, அகர்தலா ஆகிய நகரங்களில் இருந்து செல்லும் ரெயில்கள் உள்பட 25 ரெயில்களின் சேவையை கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து