எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சிப்காட் நிறுவனம் மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை 18 மாவட்டங்களுக்கு கொரோனா சிகிச்சை பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை மாநிலத்தில் ஆக்சிஜன் மற்றும் அதன் தொடர்புடைய சாதனங்களுக்கு மிகப்பெரும் பற்றாக்குறையைத் தோற்றுவித்துள்ளது. இவற்றின் அவசரத் தன்மை மற்றும் தவிர்க்கப்பட இயலாத தேவையைக் கருதி, இந்த நெருக்கடியான பெருந்தொற்றுப் பரவல் சூழ்நிலையைச் சமாளித்திட, சுகாதாரத் துறைக்கும், உள்ளூர் அமைப்புகளுக்கும் உதவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் (சிப்காட்) போதிய அளவுக்கான ஆக்சிஜன் சாதனங்களைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் உத்தரவுக்கிணங்கவும், கோவிட் பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், சிப்காட் நிறுவனம், சிங்கப்பூர், மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் துபாயிலிருந்து 1,915 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 2,380 ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகளையும், 3,250 ஓட்ட அளவு சிலிண்டர்களையும், 5,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், 800 ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்களையும் என மொத்தம் 40.71 கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்ய ஆணைகள் அளித்துள்ளது.
இதுவரை, 515 ஆக்சிஜன் சிலிண்டர்களும், 1,780 மருத்துவ ஆக்சிஜன் ஒழுங்குபடுத்தும் கருவிகளும், 250 மருத்துவ ஆக்சிஜன் ஓட்ட அளவு கருவிகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள கருவிகளைக் கூடிய விரைவில் வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உள்ளூர் வழங்குநர்களிடமிருந்து 4.33 கோடி ரூபாய் மதிப்பிலான, ஈரப்பதமூட்டியுடன் கூடிய ஓட்டக்கருவிகள், முறைப்படுத்தும் கருவிகள், செப்பு விசைக் குழாய்கள், வெளியேற்றும் குழாய்கள், பலவாயில் குழாய்கள் முதலியனவற்றை, சிப்காட் நிறுவனம் கண்டறிந்து கொள்முதல் செய்து பொதுப்பணித் துறை மருத்துவப் பணிகளுக்கு வழங்கியுள்ளது. அதன்மூலம் சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளில், இதுவரை உயிர்வளி இணைக்கப்படாத 1,000 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன.
மேலும், சிப்காட் நிறுவனம், தனது தொழில் பூங்காக்களின் அருகில் அமைந்திருக்கும் தொழிற்பிரிவுகளிலிருந்து, 2,000 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களைத் தருவித்து, அவற்றின் தேவைக்கேற்ப, ஆக்சிஜனை நிரப்பி, கும்மிடிப்பூண்டி மற்றும் தூத்துக்குடி திட்ட அலுவலகங்கள் வாயிலாக, சென்னை மாவட்டத்திற்கு 1,010, சிவகங்கை மாவட்டத்திற்கு 130, விழுப்புரம் மாவட்டத்திற்கு 100, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 20, வேலூர் மாவட்டத்திற்கு 100, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 250, திருவள்ளூர் மாவட்டத்திற்கு 130, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 100, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 100, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 60 என, மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சைப் பயன்பாட்டுக்காக விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட ஆணைகளில், 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் சிங்கப்பூரிலிருந்து, விசாகப்பட்டினத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள, 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை கரூர் மாவட்டத்திற்கு 75, தருமபுரி மாவட்டத்திற்கு 75, நீலகிரி மாவட்டத்திற்கு 75, சிவகங்கை மாவட்டத்திற்கு 100, நாமக்கல் மாவட்டத்திற்கு 75, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 75, திருவாரூர் மாவட்டத்திற்கு 75, தேனி மாவட்டத்திற்கு 75, திண்டுக்கல் மாவட்டத்திற்கு 75, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 75, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 75, விருதுநகர் மாவட்டத்திற்கு 75, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 75, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 75, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 100, கடலூர் மாவட்டத்திற்கு 100, விழுப்புரம் மாவட்டத்திற்கு 75, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 50, என மொத்தம் 1400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் முறைப்படுத்தும் கருவிகளை கொரோனா சிகிச்சைப் பயன்பாட்டுக்காக வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கும் நிகழ்வினை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 weeks 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
நடிகர் விஜய் கட்சி மாநாடு பணிகள் 90 சதவீதம் நிறைவு : பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐ.ஜி. ஆலோசனை
23 Oct 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
-
பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
23 Oct 2024சென்னை, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கக்கடலில் தீவிர புயலாக வலுபெறுகிறது 'டானா புயல்' 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
23 Oct 2024சென்னை, வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (டானா) வலுபெற்றது.
-
தீபாவளி பண்டிகை: தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
23 Oct 2024சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
-
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 70 ஹிஸ்புல்லா அமைப்பினர் பலி
23 Oct 2024காசா, தெற்கு லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஹெஸ்புல்லா போராளிகளை இஸ்ரேலிய ராணுவம் அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
-
நீர் வரத்து அதிகரிப்பு: 2-வது முறையாக மேட்டூர் நீர்மட்டம் 100 அடியை எட்டியது
23 Oct 2024சேலம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 29,850 கன அடியாக அதிகரித்தது.
-
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்: டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கண்டனம்
23 Oct 2024புதுடெல்லி : விமானங்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் தொடர்பாக கேட்ட தகவல்களை தராத டுவிட்டர் சமூக வலைதளத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, அதன் நடவடிக்கைக
-
டானா புயல் எச்சரிக்கை: தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
23 Oct 2024சென்னை, டானா புயல் உருவானதையடுத்து தமிழகத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை 30-ம் தேதி வரை நீட்டிப்பு
23 Oct 2024சென்னை : தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
ஹிஸ்புல்லா புதிய தலைவர் சபிதீனும் கொல்லப்பட்டார்: இஸ்ரேல் ராணுவம் தகவல்
23 Oct 2024டெல்அவிவ், ஹிஸ் புல்லா இயக்கத்தின் புதிய தலைவரான சபிதீனும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
-
கூகுள் ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்குவது ஏன்? சுந்தர் பிச்சை விளக்கம்
23 Oct 2024மென்லோ பார்க், கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உணவு இலவசமாக வழங்குவதன் பின்னணியில் உள்ள காரணத்தை அந்நிறுவனத்தின் சி.இ.ஓ.
-
பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
23 Oct 2024சென்னை : தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மக
-
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
23 Oct 2024தென்காசி : குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நேற்று தண்ணீர் வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
-
பெங்களூரு கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு: உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரணை
23 Oct 2024பெங்களூரு, பெங்களூர் கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.
-
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஜே.எம்.எம். கட்சி
23 Oct 2024ராஞ்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் ராஞ்சி தொகுதியில் மஹுவா மாஜி போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளத
-
ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஜே.எம்.எம். கட்சி முதல்வர் சோரனும், அவரது மனைவியும் போட்டி
23 Oct 2024ராஞ்சி, ஜார்கண்ட் சட்டசபை தேர்தலையொட்டி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 35 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
போலி என்.சி.சி. முகாம் நடந்தது எப்படி? - விரிவான விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Oct 2024சென்னை : 4 பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்தது எப்படி? என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கமலாவுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை அளித்த பில்கேட்ஸ்
23 Oct 2024வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
எனக்காக உங்களிடம் ஆதரவு கேட்பது இதுவே முதல் முறை: வயநாட்டில் பிரியங்கா காந்தி வாக்கு சேகரிப்பு
23 Oct 2024வயநாடு, பல தேர்தல்களில் கட்சிக்காக கடந்த 35 ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறேன்.
-
மீண்டும், மீண்டும் புதிய உச்சம்: ரூ.59 ஆயிரத்தை நெருங்கும் ஒரு பவுன் தங்கத்தின் விலை : நகை பிரியர்கள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி
23 Oct 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிரடியாக உயர்ந்து நேற்று புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை விரைவில் ரூ.59 ஆயிரத்தை நெருங்குகிறது.
-
டானா புயல் எதிரொலி: 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து
23 Oct 2024கொல்கத்தா, டானா புயல் நாளை சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக 150-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்ப
-
கேரளாவில் கார் - லாரி நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி
23 Oct 2024பாலக்காடு, பாலக்காடு அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பலியானார்கள்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பரில் கோவை வருகை : ஐ.டி. பார்க் வளாகத்தை திறந்து வைக்கிறார்
23 Oct 2024கோவை : கோவை விளாங்குறிச்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2-வது ஐ.டி. பார்க் வளாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் திறந்து வைக்கிறார்.
-
வலுபெற்றது டானா புயல்: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
23 Oct 2024சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (டானா) வலுபெற்றது.
-
வாஷிங்டன் சுந்தரை இந்திய அணியில் சேர்த்தது ஏன்? - கவுதம் காம்பீர் விளக்கம்
23 Oct 2024புனே : நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர்