முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி மாவட்டத்தில் மின்தடை இருளில் மூழ்கிய கிராமங்கள்

வியாழக்கிழமை, 27 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, குடியிருப்புகளை நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன.

தொடர் புயல் மற்றும் வெப்பசலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மழையால் முக்கிய ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ளை அபாய எச்சரிக்கை தொடர்கிறது. ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பன்றிக்கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு கிராமங்களுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கயிறு கட்டி பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர்.

தொடர் மழையால் முக்கடல் அணை ஒரே நாளில் பத்து அடி உயர்ந்து முழு கொள்ளளவான 25 அடியை எட்டியது. திருப்பதிச்சாரம் அருகே கண்டமேட்டுகாலணியில் அருள் என்ற கூலி தொழிலாளி வீட்டின் மீது தென்னை மரம் விழுந்ததால் வீட்டின் ஒரு பகுதி முழுவதும் சேதமானது. அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் அனைவரும் உயிர் தப்பினர். மாவட்டத்தில் பல இடங்களில் மின்சாரம் தடை செய்யபட்டு உள்ளதால் பல கிராமங்கள் இருளில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தடிக்காரகோணம் ஊராட்சிக்குட்பட்ட கீரிப்பாரையில் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ரப்பர் தொழிற்சாலைக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. வடக்கு தாமரை குளம் - பறக்கை சாலை பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்கிருந்த பாலத்தின் அடியில் ஆகாயத்தாமரைச் செடிகள் சிக்கிக் கொண்டன. உடனடியாக அவை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து