முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேச்சுவார்த்தைக்கு தயார் - ஆனால் வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது: மத்திய அமைச்சர்

புதன்கிழமை, 9 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதைத் தவிர மற்ற பிரச்சினைகள் குறித்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு சார்பில் பல கட்டங்களாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவையனைத்தும் தோல்வியில் முடிந்தன. 

இதனிடையே கொரோனா பரவல் மார்ச் மாதம் அதிகரித்தை தொடர்ந்து போராட்டம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும் விவசாயிகள் தங்கள் வீடுகள், பகுதிகளில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் விவசாயிகள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். 

இந்தநிலையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாய அமைப்புகள் பேச விரும்பினால் அவர்களுடன் பேச மத்திய அரசு தயாராக உள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை பாதிக்காது. அது தொடர்பாக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் கோரிக்கைகள் கேட்கப்பட்டு அதில் மாற்றங்களும் செய்யப்பட்டு விட்டன. இப்போது கூட விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. அதே சமயம் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் கோரிக்கையை ஏற்க முடியாது. அது தவிர வேறு பிற சாத்தியகூறுகள் குறித்து விவாதிக்கலாம். மற்ற பிரச்னைகள் குறித்து விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து