முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவால் பாதித்த துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி நிதி திட்டம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

திங்கட்கிழமை, 28 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

டெல்லி : கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு அரசு உத்தரவாதத்துடனான 1.1 லட்சம் கோடி நிதி திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது அவர் கொரோனா நிவாரண நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். அதன் விபரம் வருமாறு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு மொத்தமாக 1.1 லட்சம் கோடி ரூபாய் உத்தரவாத கடன் வழங்கப்படும். 

மருத்துவ துறைக்கு 7.95 சதவீதத்துடன் 100 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

கொரோனாவால் பாதித்த மாநிலங்களுக்கு ரூ.50,000 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும். 

சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டுமே 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உத்தரவாதம் அளிக்கப்படும் 

சுகாதாரத் துறை தவிர்த்து மற்ற துறைகளுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும், அதற்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக இருக்கும். 

அவசர கால கடனாக தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் கோடி கடன் வழங்கப்படும் 

25 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு 1.25 லட்சம் ரூபாய் வரையிலும், டூரிஸ்ட் ஏஜென்ஸிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு (Tourist Guides) 1 லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து