முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் : பஞ்சாப் மக்களுக்கு கெஜ்ரிவால் வாக்குறுதி

செவ்வாய்க்கிழமை, 29 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சண்டிகர் : பஞ்சாப் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், நாங்கள் முதலில் 3விஷயங்களை செய்வோம். அதனை உங்களிடம் அறிவிக்கிறேன். நாங்கள் வெற்றி பெறும் பட்சத்தில், முதலாவதாக, அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம். இதனால், மாநிலத்தில் உள்ள 77 முதல் 80 சதவீத மக்கள் மின்சாரம் கட்டணம் செலுத்த தேவையில்லை. பலருக்கு மின்கட்டணம் குறையும். இரண்டு மின் விளக்குகள் மற்றும் மின்விசிறி வைத்து உள்ள ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.50 ஆயிரம் கட்டணம் எப்படி வர முடியும்? தவறாக கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இரண்டாவதாக, பழைய கட்டணங்கள் மற்றும் நிலுவையில் உள்ள கட்டணங்களும் ரத்து செய்யப்படும். இதனால், பழைய கட்டணங்களை யாரும் செலுத்த தேவையில்லை. துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள் மீண்டும் வழங்கப்படும்.  மூன்றாவதாக, 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகம் செய்யப்படும். 

கடந்த 2013-ல் நாங்கள் டெல்லியில் ஆட்சிக்கு வந்த போது, மக்கள் அதிக கட்டணம் செலுத்தி வந்தனர். பஞ்சாபில் உள்ளது போல், டெல்லியிலும் மின்சார நிறுவனங்களுடன் இணைந்து அரசு செயல்பட்டு வந்தது. தற்போது, டெல்லியில் 24 மணி நேரமும் குறைந்த விலையில் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.

இதனையே பஞ்சாபிலும் செய்வோம்.  இது கெஜ்ரிவாலின் வாக்குறுதி. முதல்வர், கேப்டன் அமரீந்தர் சிங்கின் வெற்று வாக்குறுதி அல்ல. நாங்கள் எங்களது வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம். ஆனால், அமரீந்தர் சிங், 5 ஆண்டுகள் ஆகியும் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து