முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் புதிதாக பதவியேற்றுள்ள மத்திய மந்திரிகளுக்கு புதுவை கவர்னர் தமிழிசை வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 9 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி: டெல்லியில் புதிதாக பதவியேற்றுள்ள மத்திய மந்திரிகளுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், முதன்முறையாக மத்திய அமைச்சரவை நேற்று  விரிவாக்கம் செய்யப்பட்டது. 

இதன்படி டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் புதிய மந்திரிகளின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் புதிதாக 43 பேர் மத்திய அமைச்சர்களாக பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர்.  

புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.  

இதுபற்றி தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

பிரதமர் நரேந்திர மோடியின் தெளிவான வழிகாட்டுதலின்படி, மத்திய அமைச்சர்களாக புதிதாகப் பதவியேற்றுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் பாரதத் திருநாடு, உலக அரங்கில் பீடுநடை போடுவதற்கும் நம் தாய்த் திருநாட்டின் பெருமையை உயர்த்துவதற்கும் நம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் ஒவ்வொரு கடைகோடி இந்தியருக்கும் கிடைப்பதற்கும் இந்த அமைச்சரவை செயலாற்றும் என்பது உறுதி. 

அனைத்து தரப்பினரையும், அதிக எண்ணிக்கையில் மகளிரையும் உள்ளடக்கிய இந்த அமைச்சரவை மக்கள் பணியில் வெற்றிகரமாக செயலாற்றுவதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள எல்.முருகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் பணி இந்திய நாட்டுக்கும், தமிழ் மக்களின் வாழ்வு சிறக்கவும் அமைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து