முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பாண்டில் 40,000 இளம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: டி.சி.எஸ். நிறுவனம் அறிவிப்பு

சனிக்கிழமை, 10 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: நடப்பு நிதியாண்டில் (2021-22) படித்து முடித்த 40 ஆயிரம் இளம் பட்டதாரிகளைப் பணிக்கு எடுக்கப் போவதாக மிகப்பெரிய மின்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டிங் சர்வீஸ் நிறுவனத்தின் (டி.சி.எஸ்) முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனியார் மென்பொருள் நிறுவனத்திலேயே 5 லட்சம் ஊழியர்களைக் கொண்டு செயல்படும் டி.சி.எஸ். நிறுவனம், 2020-ம் ஆண்டு 40 ஆயிரம் இளைஞர்களைப் பணிக்கு எடுத்தது. இந்த ஆண்டும் அதே அளவில் ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதாக அந்த நிறுவனத்தின் சர்வதேச மனிதவளத்துறை தலைவர் மிலந்த் லக்காட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டி.சி.எஸ். நிறுவனத்தின் சர்வதேச மனிதவளத்துறையின் தலைவர் மிலந்த் லக்காட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவலால் பணிக்குத் தேவையான இளைஞர்களைத் தேர்வு செய்வதில் எந்தவிதமான சிரமமும் எங்களுக்கு ஏற்படவில்லை. 3.60 லட்சம் இளைஞர்கள் வேலைக்கான நுழைவுத்தேர்வில் ஆன்லைன் மூலம் கடந்த ஆண்டு பங்கேற்றனர். கடந்த ஆண்டு 40 ஆயிரம் இளைஞர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்ந்தெடுத்தோம். இந்த ஆண்டும் அதே அளவுக்கு 40 ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளோம். அமெரிக்க கல்லூரிகளில் இருந்து 2 ஆயிரம் இளைஞர்களையும் கடந்த ஆண்டு தேர்ந்தெடுத்தோம்.

சர்வதேச அளவில் வர்த்தகம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டால், கேம்பஸ் மூலம் ஏராளமான இளைஞர்களைத் தேர்வு செய்வோம். சர்வதேச அளவிலான ஒரு ஒப்பந்தம் பேசப்படும் போதே மூன்று மாதங்களுக்கு முன்பே பணியாட்களைத் தேர்வு செய்யத் தொடங்கி விடுவோம்.  இவ்வாறு மிலந்த் லக்காட் தெரிவித்துள்ளார்.

டி.சி.எஸ். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கணபதி சுப்ரமணியம் கூறுகையில், இந்தியாவில் மனித வளத்துக்கோ, திறமையான இளைஞர்களுக்கோ பஞ்சமில்லை. இந்திய இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, மனநிறைவுடன் பணியாற்றுவதற்கு இணையில்லை எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து