முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதுச்சேரியில் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு கல்லூரிகளும் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி: புதுச்சேரியில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு வரும் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

உலகையே மிரட்டிய கொரோனா இந்தியாவிலும் புகுந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு (2020) மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் 2-வது அலையில், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. முன்னதாக  கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  அரசின் அதிரடி நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது. இதையடுத்து மே மாதம் 24-ம்  தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது உயிரிழப்பு, பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. எனவே ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சில மாநில அரசுகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதிகளை அறிவித்து வருகின்றன. மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள், பயிற்சி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மதிப்பீடு முறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன. ஜூலை 31-ம் தேதிக்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், புதுச்சேரியில் 9 முதல் 12-ம் வகுப்பு வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதைபோல புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரிகளும் வரும் 16-ம் தேதி முதல் திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து