எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவையில் ரூ.225 கோடி மதிப்பில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதன் சிறப்பம்சங்கள் வருமாறு:
* சுற்றுப்புறம் மற்றும் சூழலுக்கு பாதிப்பின்றி சுரங்கப் பணிகளை செயல்படுத்திட இந்த அரசு நீடித்த நிலையான சுரங்க கொள்கையை உருவாக்கும்.
* இது தவிர, பசுமை சுங்க மேல்வரி விதிக்கப்பட்டு ஒரு பசுமை நிதியம் உருவாக்கப்படும். இதன் மூலம் கைவிடப்பட்ட குவாரிப் பகுதிகள் முறைப்படி மூடப்பட்டு பாதுகாக்கப்படும். ஆறு கோடி வருடங்களுக்கு முந்தைய உள்நாட்டு புதை வடிவங்கள் கண்டறியப்பட்டுள்ள அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில், புவியியல் புதைபடிவ பூங்கா ஒன்று பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதி, கட்டமைப்பு, இதர சிக்கல்களை ஆய்வு செய்வதற்கும், இந்நிறுவனங்கள் வளர்ச்சி அடைய தேவைப்படும் நடவடிக்கைகள் பரிந்துரைக்கவும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். ந.சுந்தரதேவன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
* முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஆலோசனையின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் அவற்றிற்கு கடன் அளித்தவர்கள் தங்களது கடன்களை மறு கட்டமைப்பு செய்ய முன்வந்தால், அரசு கடன் உத்தரவாதத்துடன் நிதி நிறுவனங்களின் உதவியுடன் கடன் வழங்கப்படும்.
* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களின் நிலுவைத் தொகைகளை விரைவாக வசூலிப்பதற்கான வழிவகைகளை உறுதி செய்வதற்கான வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடித் தளங்களின் கீழ் அனைத்து மாநில பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள் கொண்டு வரப்படும்.
* 265 ஏக்கர் மொத்தப் பரப்பளவில் 5 இடங்களில் நில வங்கிகளை சிட்கோ நிறுவ உள்ளது. சிட்கோ தொழில்துறை பூங்காக்களில், விற்கப்படாத மனைகளை விரைவாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதற்காக விலைக் கொள்கை சீரமைக்கப்படும்.
* ஒற்றைச் சாளர அமைப்புமுறை திறம்பட செயல்படுத்தப்பட்டு, அதன் கீழ் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேலும் 100 சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேலும் 110 சேவைகளும் ஒற்றைச் சாளர வலைவாசலின் கீழ் கொண்டு வரப்படும்.
* வளர்ந்து வரும் துறைகளில் தமிழகத்தின் பங்கை வலுப்படுத்துவதற்காக உயிரியல் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றிற்கான புதிய தொழில் கொள்கைகள் விரைவில் அறிவிக்கப்படும். அதிக அளவிலான முதலீடுகளை ஊக்குவிக்க புலம்பெயர் தமிழர்களுடனான உறவு வலுப்படுத்தப்படும்.
* தமிழகத்தில் உள்ள தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 45,000 ஏக்கர் அளவிலான நில வங்கித் தொகுப்புகள் உருவாக்கப்படும்.
* தூத்துக்குடி மாவட்டத்தில் 4,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் விதமாகவும், 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறும் 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் 1,000 கோடி ரூபாய் செலவில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா ஒன்று அமைக்கப்படும்.
* திருவள்ளூர் மாவட்டத்தின் மாநல்லூரில் ஒரு மின்-வாகனப் பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்திப் பூங்கா, மணப்பாறை, தேனி மற்றும் திண்டிவனம், ஆகிய இடங்களில் மூன்று உணவுப் பூங்காக்களும் நிறுவப்படும். தொழில்துறை அலகுகளுக்காக தூத்துக்குடியில் 60 MLD அளவு கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஓசூரில் உள்ள தொழிலகங்களுக்கான 10 MLD TTRO கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்படும்.
* பழைய மாமல்லபுரம் சாலை தகவல் தொழில்நுட்ப துறை பெருவழியாக வளர்ச்சியடையவதற்கு, 2000 ஆம் ஆண்டில் சென்னையில் கருணாநிதியால் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது முக்கிய காரணமாகும். இப்போது தமிழகத்திலுள்ள நிலை II மற்றும் நிலை III நகரங்களிலும் டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. முதல்கட்டமாக, விழுப்புரம் மாவட்டத்தின் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும்.
* ஓசூர், சேலம், திருச்சி மற்றும் கோயம்புத்தூரை இணைக்கும் பாதுகாப்பு தொழில்துறை பெருவழிகளை நிறுவுவதாக மத்திய அரசு அறிவித்த போதிலும், அதற்கான மத்திய அரசின் உதவி குறைவாகவே உள்ளது. கோயம்புத்தூரில், 500 ஏக்கர் பரப்பளவில், 225 கோடி ரூபாய் மதிப்பில், பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காவை மாநில அரசு அமைத்து செயல்படுத்தும். இதன் மூலம், 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு
13 Nov 2024சென்னை : பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
குரூப் 4 பணிக்கான சான்றிதழ்களை நவ.21 வரை பதிவேற்றம் செய்யலாம் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
13 Nov 2024சென்னை : குரூப் 4 பணிக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்வதற்கு நவ. 21 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆஸி.யை இந்தியா வீழ்த்தும்: சேத்தன் சர்மா நம்பிக்கை
13 Nov 2024மும்பை : ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தும் என்று முன்னாள் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா கூறியுள்ளார்.
-
கத்திக்குத்து சம்பவத்திற்கு கண்டனம்: மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் : த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
13 Nov 2024சென்னை : டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.
-
கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்த மருத்துவரின் குடும்பத்தினரை சந்தித்து துணை முதல்வர் உதயநிதி ஆறுதல்
13 Nov 2024சென்னை, சென்னையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரத்தில், முதல்வர் மு.க.
-
தங்கம் விலை குறைவு
13 Nov 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக நேற்றும் (நவ. 13) அதிரடியாக குறைந்து விற்பனையானது.
-
இந்திய அணி செல்லாததால் முடிவு: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாக். அணி விலகல்?
13 Nov 2024துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்று பி.சி.சி.ஐ.
-
ரூ. 1,260 கோடி மதிப்பில் பீகார் மாநிலம், தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல்
13 Nov 2024பாட்னா : பீகார் மாநிலம் தர்பங்காவில் ரூ. 1,260 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.
-
5.2 ரிக்டர் அளவில் ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்
13 Nov 2024ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வயநாடு தொகுதி இடைத்தேர்தல்: வாக்களித்தார் பிரியங்கா காந்தி
13 Nov 2024வயநாடு : கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று.
-
குஜராத் அணிக்கு பயிற்சியாளர்
13 Nov 202418-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடக்க இருக்கிறது.
-
தென்மேற்கு வங்கக்கடலில் புயல் சின்னம் வலுவிழந்தது
13 Nov 2024சென்னை, வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
எழுத்தாளர் ராஜ் கெளதமன் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
13 Nov 2024சென்னை : எழுத்தாளர் ராஜ் கெளதமனின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
சென்னை: அரசு மருத்துவர் மீதான கத்திக்குத்து சம்பவம்: விரிவான விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு : மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என உறுதி- எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
13 Nov 2024சென்னை : சென்னை மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
ஆஸி.க்கு எதிரான பயிற்சி ஆட்டம்: ரத்து செய்த இந்திய அணி மீது சுனில் கவாஸ்கர் விமர்சனம்
13 Nov 2024மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த பி.சி.சி.ஐ.யின் செயலை கண்டித்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணி மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார
-
குரூப் 4 பணிக்கான சான்றிதழ்களை நவ.21 வரை பதிவேற்றம் செய்யலாம்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
13 Nov 2024சென்னை, குரூப் 4 பணிக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்வதற்கு நவ. 21 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டாக்டர் மீது கத்திக்குத்து: கைதானவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு
13 Nov 2024கிண்டி, டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்த அரசு டாக்டரை சந்தித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஆறுதல்
13 Nov 2024சென்னை, கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அரசு டாக்டரை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
-
மருத்துவர் மீது கத்திக்குத்து: அரசு மருத்துவர் விளக்கம்
13 Nov 2024சென்னை : சென்னையை அடுத்த கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அரசு மருத்துவர் மீது, கத்திக்குத்துச் சம்பவம் நடந்தது ஏன் என்பது குறித்து அரசு மருத்துவர் விள
-
வடகிழக்கு பகுதிகளில் கடந்தாண்டு 38 பேர் பலி : உள்துறை அமைச்சகம் விளக்கம்
13 Nov 2024புதுடெல்லி : வடகிழக்கு பகுதிகளில் கடந்தாண்டு வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோர் 38 பேர் என்று உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
-
ஜார்க்கண்ட் மாநில தேர்தல்: 43 சட்டப்பேரவை தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
13 Nov 2024ராஞ்சி : ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 43 தொகுதிகளில் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்றது.இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங
-
உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் புட்டோசர் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீட்டை இடிப்பது சட்டவிரோதம் : சுப்ரீம் கோர்ட் அமர்வு தீர்ப்பு
13 Nov 2024புதுடில்லி : உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீட்டை இடிப்பது சட்டவிரோதம் என்று புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பதற்கு எதிரான வழக்க
-
தொழில் மோசடி விவகாரம்: டோனிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
13 Nov 2024ராஞ்சி : தொழில் மோசடி விவகாரம் தொடர்பாக டோனிக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குற்றப்பத்திரிகை...
-
மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது : பாஜக மீது ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டு
13 Nov 2024ராஞ்சி : நிழல் பிரசாரங்களின் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் பாஜக செயல்படுவதாக முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஜிப்லைனில் பயணித்த ராகுல்
13 Nov 2024வயநாடு : வயநாட்டில் மிக நீளமான ஜிப்லைனில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி பயணம் செய்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.