முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடற்படை தளங்கள் மீது டிரோன்கள் பறக்க தடை

வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துக் கடற்படைத் தளங்களின் பாதுகாப்பை பலப்படுத்த அதன் மீது டிரோன் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையில் ஐ.என்.எஸ். அடையாறு, அரக்கோணத்தில் ஐ.என்.எஸ். ராஜாளி, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து, திருநெல்வேலியில் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் உள்ளிட்ட கடற்படை தளங்கள் உள்ளன. இந்த கடற்படைதளங்களுக்கு பாதுகாப்பை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தக் கடற்படை தளங்கள் மீது டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், தடை செய்யப்பட்ட இப்பகுதியில் டிரோன்கள் உள்ளிட்டவை இயக்க சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள், தனியார் ஏஜென்சிகள், பொது சிவில் விமான இயக்குநரகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். இதுதொடர்பாக, டிஜிஸ்கை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒப்புதல் கிடைத்த பிறகு, அதற்கான அனுமதி கடிதத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, பாதுகாப்புத் துறை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து