முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இருந்து விலகிய மேற்குவங்க நடிகை ரூபா

வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : அவமானம் தாங்க முடியாமல் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக, மேற்கு வங்க நடிகை ரூபா பட்டாச்சார்ஜி கூறினார். 

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நடிகை ரூபா பட்டாச்சார்ஜி, பா.ஜ.க.வில் பணியாற்றி வந்த நிலையில், திடீரென அந்த கட்சியில் இருந்து விலகி விட்டார். தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அதிருப்தி பதிவுகளை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு ரூபா பட்டாச்சார்ஜி அளித்த பேட்டியில், 

நடிகையாக இல்லாமல் நான் ஒரு சமூக ஆர்வலராக இருந்து வருகிறேன். கொரோனா இரண்டாவது அலையின் போது, நிறைய சமூக சேவைப் பணிகளை செய்தேன். நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்ததால், நான் அக்கட்சியில் இருந்து விலகவில்லை.

நான் சந்தித்த அவமானங்களால் கட்சியில் இருந்து விலகுகிறேன். கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருந்த காலகட்டத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி அமைச்சர்கள் இருவரை, சி.பி.ஐ. கைது செய்தது கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க பா.ஜ.க. தலைமை மீது எனக்கு அதிருப்தி உள்ளது. பா.ஜ.க. பொதுச் செயலாளர் சயந்தன் பாசு என்னை கடுமையாக திட்டினார். அவரிடம் அதற்கான காரணம் கேட்டேன்.

ஆனால் அவர் எதுவும் சொல்ல மறுக்கிறார். அது, எனக்கும் மிகவும் அவமதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவி்த்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து