முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 நாட்களுக்கு ஒரு முறை திருக்கோவில் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை : செய்வதை உறுதி செய்ய வேண்டும் : அமைச்சர் சேகர் பாபு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை, நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருக்கோயில்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து அலுவலர்கள் ஆய்வு கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையிலும்,  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் முன்னிலையிலும் நடைபெற்றது.  

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது, 

இந்து சமய அறநிலையத்துறை இறைவனுக்கு தொண்டு செய்யும் மிகவும் புனிதமான துறையாகும். திருக்கோயில்களில் விரைவில் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு நடத்துவதற்கு வேண்டிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளை அதிகப்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தி பள்ளி வளாகத்தை தூய்மையாக வைக்க வேண்டும்.

திருக்கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். பணியாளர்களுக்கு தற்போது பணிச் சுமைகள் அதிகமாக உள்ளதை நான் நன்கு அறிவேன். விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு பணிச் சுமைகள் குறைக்கப்படும். கோயிலுக்கு வருகின்ற பக்தர்களிடம் திருக்கோயில் பணியாளர்கள் உள்ளன்போடு பணியாற்ற வேண்டும்.

மேலும், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ரூ. 625 கோடி மதிப்பீட்டில் மீட்கப்பட்ட  திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாப்பான முறையில் பராமரித்து வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கோயில் யானைகளுக்கு 30 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்வதை திருக்கோயில் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். விழாக் காலங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் யானைகளை இயற்கையான சூழ்நிலைகளில் வைத்து பராமரிக்க வேண்டும்.  இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) இரா.கண்ணன், கூடுதல் ஆணையர் (விசாரணை) திருமகள், அனைத்து மண்டல இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் தலைமையிட அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து