முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு அக். 4-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம்

வியாழக்கிழமை, 9 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினருக்கான 2 காலி இடங்களுக்கு அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறும் என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அ.தி.மு.க. சார்பாக, மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால், தங்களுடைய எம்.பி. பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து அவ்விரு இடங்களும் காலியானதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், அந்த 2 காலி இடங்களுக்கு அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறும் என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் 2 காலியிடங்கள், மேற்கு வங்கம், அசாம், மகராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு காலியிடம் என, மொத்தம் 6 காலியிடங்களுக்கு அன்றைய தினம் தேர்தல் நடைபெற உள்ளது. 

இத்தேர்தலுக்கு வரும் 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி வேட்புமனு மறுபரிசீலனையும், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற 27-ம் தேதி கடைசி நாள் என  அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4-ம் தேதியன்று காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடைபெறும். மாலை 5 மணிக்குத் தேர்தல் முடிவுகள் வெளியாகும்.  

இவ்விரு காலியிடங்களில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் 2022, ஜூன் மாதம் மற்றும் கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 2026, ஏப்ரல் மாதம் முடிவடையும்.  முன்னதாக, மாநிலங்களவையில் காலியாக இருந்த ஒரு இடத்தில், தி.மு.க.வின் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி சமீபத்தில் தேர்வானது குறிப்பிடத்தக்கது.  

இதையடுத்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகள் இந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டு வருகின்றனர்.  தி.மு.க. கூட்டணிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் உறுதி என்றாலும் இன்னொரு மாநிலங்களவை உறுப்பினர் அ.தி.மு.க.வுக்கு சேருமா? அல்லது அதையும் தி.மு.க.வே கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் ஏற்கனவே மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக இருந்த நிலையில் அவற்றில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு அதில் தி.மு.க. வேட்பாளர் அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாநிலங்களவையில் ஓய்வு பெறும் உறுப்பினரின் காலி பணியிடத்தை நிரப்புவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் என்.கோகுலகிருஷ்ணன் வரும் 06.10.2021 அன்று ஓய்வு பெறுகிறார். இதனால் இந்த இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதன்படி, அக்டோபர் 4-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும். தேர்தலுக்கான அறிவிப்பு வரும்  15-ம் தேதி (புதன்கிழமை) அன்று வெளியிடப்படும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்  22-ம் தேதியாகும்.

வேட்புமனுக்கள் 23-ம் தேதியன்று (வியாழக்கிழமை) பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி வரும் 27-ம் தேதி (திங்கட்கிழமை) ஆகும்.

கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி இந்தத் தேர்தலை நடத்தும்படி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளின் போது கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து