முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 22-ம் தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார்

வெள்ளிக்கிழமை, 10 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

வரும் 22-ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். 

கடந்த 2014-ம் ஆண்டு இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றார். அந்த ஆண்டின் ஜுன் 15 முதல் 2019-ம் ஆண்டு வரையில் பிரதமர் மோடி 96 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதில், 2014-ம் ஆண்டு 9 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோடி 2015-ம் ஆண்டு 23 நாடுகளுக்கும், 2016-ம் ஆண்டு 17 நாடுகளுக்கும் அடுத்த ஆண்டுகளில் 14 நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார்.

கடந்த, 2017-ம் ஆண்டு 14 வெளிநாட்டு பயணங்களும், 2018-ம் ஆண்டு 23 வெளிநாட்டு பயணங்களும், 2019-ம் ஆண்டு 15 வெளிநாட்டு பயணங்களும் மேற்கொண்டுள்ளார். ஒரு முறை 35 நாடுகளுக்கும், இரண்டு முறை 15 நாடுகளுக்கும், மூன்று முறை 2 நாடுகளுக்கும், நான்கு முறை 4 நாடுகளுக்கும், ஐந்து முறை 3 நாடுகளுக்கும், 6 முறை ஒரு நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 2020-ம் ஆண்டு பிரதமருக்கு வெளிநாடு பயணம் இல்லாத ஆண்டாக மாறியுள்ளது.

 

இந்நிலையில் வரும் 22-ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார். ஆப்கானிஸ்தான் நிலவரம், சீனாவுடனான எல்லை பிரச்னை உள்ளிட்ட விவகாரம் குறித்து ஆலோசிக்கிறார். தொடர்ந்து 24-ம் தேதி  ஜப்பான், ஆஸ்திரேலிய நாட்டு தலைவர்களையும் ரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து