எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு பற்றிய பதிவு மற்றும் காணொலிக் காட்சி வாயிலாக மாணவச் செல்வங்களுக்கு வெளியிட்டுள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது,
மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம்! நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்!
கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாணவி அனிதா இறந்த போது என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். சனிக்கிழமை சேலத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட போதே, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்று மாணவச் செல்வங்களைக் கேட்டுக்கொண்டேன். ஆனால், நேற்று (நேற்று முன்தினம்) அரியலூர் மாவட்டத்தில் கனிமொழி என்ற மாணவியும், இன்றைக்கு வேலூர் மாவட்டத்தில் சவுந்தர்யா என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் சுக்குநூறாக உடைந்து விட்டேன். இப்போது எனக்கு இருக்கும் வேதனையைவிட, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்ற கவலைதான் அதிகமாக இருக்கிறது. அந்த அக்கறையோடுதான் உங்களிடம் பேசுகிறேன்.
பல தலைமுறைகளாக மறுக்கப்பட்டு வந்த கல்விக் கதவை, இழுத்து மூடும் செயல்தான் நீட் தேர்வை கொண்டு வந்தது. படிப்பதற்குத் தகுதி தேவையில்ல. படித்தால் தன்னால் தகுதி வந்து விடும். பல குளறுபடிகளைக் கொண்ட நீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்களுடைய கல்விக் கனவை நாசமாக்கக் கூடியது என்றுதான், தி.மு.க. இந்த அநீதி தேர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதுக்கு முன்னால் நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதும் நடத்தவிடவில்லை. ஆனாலும், சிலர் தங்களுடைய சுயலாபத்துக்காக, இந்தத் தேர்வைத் தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தார்கள். சிலர் இப்போதும் இந்த அநீதி தொடர வேண்டும் என்று பல பொய்யான பரப்புரைகள் செய்கிறார்கள்.
மருத்துவம் படிக்க வேண்டும் - டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களின் கனவைச் சிதைகக் கூடியதாக நீட் தேர்வு முறை இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு, இதில் இருந்து விலக்களிக்க இன்னும் இறங்கி வராமல் கல்நெஞ்சோடு இருக்கிறது. கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க. அரசு, நீட் தேர்வு குறித்து விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்திடம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தார்கள். ஒரு சிலரைத் தவிர எல்லோருமே நீட் தேர்வை எதிர்த்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில நீட் தேர்வு வேண்டாம் என்று அந்த ஆணையமும் அறிக்கை அளித்தது.
அதை அடிப்படையாக வைத்து, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனி மசோதாவை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் தாக்கல் செய்தேன். அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக இதனை நிறைவேற்றி இருக்கிறோம். பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கருத்தை,பல்வேறு மாநில அரசுகளின் கவனத்திற்கும் கொண்டு செல்ல இருக்கிறோம். இறுதியாக நீட் தேர்வை ரத்து செய்யும் நிலையை நிச்சயம் ஏற்படுத்துவோம்.
இந்தச் சூழலில் மருத்துவம் படிக்க முடியவில்லையே - நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஏக்கம் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் செய்தி என் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவதாக இருக்கிறது. உங்களுடைய உயிர், விலைமதிப்பு இல்லாதது. உங்கள் உயிர், உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் முக்கியமானது. உங்களுடைய எதிர்காலத்தில்தான் இந்த நாட்டின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. அத்தகைய மதிப்பு வாய்ந்த உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்கிறேன்.
உங்களால் மருத்துவர்கள் ஆக முடியும். உங்களால் நினைத்ததை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்ட முடியும். உங்களால் முடியாதது எதுவுமில்லை. அந்த தன்னம்பிக்கையோடு நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும். உங்கள் உயிரை மாய்த்து, உங்கள் பெற்றோருக்கு வாழ்க்கை முழுவதும் துன்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.
கல்வியில் மட்டுமல்ல - தன்னம்பிக்கையிலும் தலைசிறந்த மனிதர்களாக வளர வேண்டும். பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளைக் கல்வியில் மட்டுமின்றி, தன்னம்பிக்கையும் கொண்ட மனிதர்களாக வளர்க்க வேண்டும். இதுதான் விதி என்று எதுவுமில்லை. விதியை மதியால் வெல்ல முடியும். முயற்சிதான் வெற்றியைத் தரும் என்றார் திருவள்ளுவர். அத்தகைய துணிச்சலும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக, நமது மாணவ, மாணவிகள் வளர வேண்டும், வாழ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் சொல்வதற்காக அரசு சார்பில் 104 என்ற தொலைபேசி எண்ணை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். மாணவ, மாணவியர்க்கு ஆலோசனை சொல்வதற்காக மனநல மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். உடல் நலன், உள்ள நலன் கொண்டவர்களாக நமது மாணவச் செல்வங்களை வளர்த்தெடுத்தாக வேண்டும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறிய அழுத்தங்கள் தர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
ஆசிரியர்கள், சமூக சேவை செய்வோர், திரைத்துறையினர் ஆகியோர் மாணவச் செல்வங்களுக்கு தன்னம்பிக்கை விதை விதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து - தயவு செய்து மாணவச் செல்வங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். வாழ்ந்து போராடுவோம். வாழ்ந்து வென்று காட்டுவோம். இவ்வாறு அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமனம்? மேலிடப் பொறுப்பாளர் சென்னை வருகை
11 Jan 2025சென்னை, தமிழக பா.ஜ.க.வில் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் 17 ஆம் தேதி மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-01-2025.
11 Jan 2025 -
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 11 ஆனது
11 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
-
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: அமெரிக்காவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படுமாம்
11 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: அமெரிக்காவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: நிறைவேறிய சட்ட திருத்த மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய விசயங்கள்
11 Jan 2025சென்னை, பாரதீய நியாய சன்ஹிதா மற்றும் பாரதீய நகரிக் சுரஷா ஆகிய மத்திய சட்டங்களில் உள்ள 17 சட்டப்பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கும் வகையில்
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசல், மேடை அமைக்கும் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
11 Jan 2025அவனியாபுரம், உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
சுமார் ஒரு லட்சம் போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கல் சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசாணை வெளியீடு
11 Jan 2025சென்னை : பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டாயிரத்து நூற்றைந்து போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
11 Jan 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்மட்டம் 115.31 அடியாக குறைந்தது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்வு
11 Jan 2025சென்னை : சன்னையில் ஆபரத்தின் தங்கம் சவரனுக்கு நேற்று ரூ. 240விலை உயர்ந்து ரூ.58,520-க்கு விற்பனையானது.
-
பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை : அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல்
11 Jan 2025லூதியானா : ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் குர்பிரீத் கோகி பஸ்ஸி. லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
-
மாணவர்கள் என்னை அப்பா என அழைப்பது அளவில்லா மகிழ்ச்சி: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
11 Jan 2025சென்னை, தமிழ்நாடு மாணவ, மாணவிகள் என்னை அப்பா, அப்பா என வாய்நிறைய அழைக்கும்போது அளிவில்லை மகிழ்ச்சி அடைகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
-
டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 Jan 2025சென்னை : தமிழகத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்ன
-
நிபந்தனையின்றி நேசிக்கிறேன்: ரசிகர்கள் குறித்து நடிகர் அஜித் உருக்கம்
11 Jan 2025துபாய் : என் ரசிகர்களை நிபந்தனையில்லாமல் நேசிக்கிறேன் என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
-
கூச் பெஹர்: தமிழகம் சாம்பியன்
11 Jan 202519 வயதுக்கு உட்பட்டோருக்கான கூச் பெஹர் கோப்பை (4 நாள் ஆட்டம்) கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது.
-
கடைசி ஒருநாள் போட்டி: நியூசி.யை வீழ்த்தியது இலங்கை
11 Jan 2025ஆக்லாந்து : நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
-
கொள்கை மாற்ற விவகாரம்: மெட்டாவுக்கு பிரேசில் கெடு
11 Jan 2025பிரேசிலியா : மெட்டாவின் கொள்கை மாற்ற விவகாரத்தில் 72 மணிநேர பிரேசில் காலக்கெடு விதித்துள்ளது.
-
பெரியார் குறித்த பேச்சால் 70 வழக்குகள் பதிவு: விரைவில் சீமான் கைது..?
11 Jan 2025சென்னை : பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய சீமான் மீது தமிழகம் முழுவதும் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு டெல்லி பொதுகூட்டத்தில் நாளை பங்கேற்கிறார் ராகுல்
11 Jan 2025டெல்லி, சட்டசபை தேர்தலை முன்னிட்டு டெல்லியில் நடக்கும் பொதுகூட்டத்தில் ராகுல்காந்தி நாளை பங்கேற்கிறார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
-
சென்னை சிறுவர் இயற்கை பூங்காவில் இனி வாட்ஸ் அப் வழியே நுழைவுச்சீட்டு பெறலாம்
11 Jan 2025சென்னை : சென்னை கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில், வாட்ஸ் அப் வழியே நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.;
-
நாட்டில் கடன் வாங்குவதில் தமிழ்நாடு தான் முதலிடம் : தி.மு.க. அரசு மீது இ.பி.எஸ். தாக்கு
11 Jan 2025சென்னை : கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் பிடித்தது தான் தி.மு.க.வின் சாதனை என அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
-
மும்முனை போட்டி நிலவும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுமா ஆம் ஆத்மி?
11 Jan 2025புதுடெல்லி : பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட மும்முனை போட்டி நிலவும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுமா ஆம் ஆத்மி என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு முதல் ஆண்டு நிறைவு : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
11 Jan 2025புதுடெல்லி : அயோத்தியில் ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
-
மத்திய அரசு, கவர்னரை கண்டித்து கருப்பு சட்டை அணியாதது ஏன்..? அ.தி.மு.க.வினருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
11 Jan 2025சென்னை, அ.தி.மு.க.
-
எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணை 15- ம் தேதி ஒத்திவைப்பு
11 Jan 2025பெங்களூரு : எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு விசாரணை வரும் 15ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
மக்கள் சுப்ரீம் கோர்ட்டை இனி சுற்றிப்பார்க்கலாம்
11 Jan 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டை சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.