முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி - 20 அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுலை நியமிக்க வேண்டும்: முன்னாள் வீரர் கவாஸ்கர் விருப்பம்

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

எதிர்காலத்தில் புதிய கேப்டனாக நியமிக்கப்படக் கூடியவர் என்று இந்திய அணி எதிர்பார்த்தால் அது ராகுலாகதான் இருக்க முடியும் என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், டி-20 அணியின் துணை கேப்டனாக தற்போது அவரை நியமிக்கலாம் என்ற தனது விருப்பத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த கேப்டன்?

இந்திய அணியின் டி-20 கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகுவதாக அறிவித்ததையடுத்து அடுத்த கேப்டன் யார்? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ரோகித் சர்மாவுக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர் இந்திய அணியின் டி-20 கேப்டனாக நியமிக்கப்பட இருக்கிறார். ரோகித் சர்மா தற்போது துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதையடுத்து அடுத்த துணை கேப்டன் யார் என்று விவாதிக்கப்படுகிறது.

கவாஸ்கர் விருப்பம்...

இந்த நிலையில் டி-20 அணியின் துணை கேப்டனாக லோகேஷ் ராகுலை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

எதிர்காலத்தில் புதிய கேப்டனாக நியமிக்கப்படக் கூடியவர் என்று இந்திய அணி எதிர்பார்த்தால் அது ராகுலாகதான் இருக்க முடியும். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்போது கூட இங்கிலாந்தில் அவரது பேட்டிங் அருமையாக இருந்தது. 50 ஓவர் போட்டி மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் நன்கு விளையாடி வருகிறார். அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும். ஐ.பி.எல். போட்டியில் அவர் கேப்டன் பொறுப்பில் மிகவும் ஈர்க்க கூடிய வகையில் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கேப்டன்ஷிப் சுமை அவரது பேட்டிங்கை பாதிக்க ராகுல் அனுமதிக்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

 

கே.எல்.ராகுல் இந்தியாவுக்காக இதுவரை 40 டெஸ்ட், 38 ஒரு நாள் மற்றும் 48 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். முன்னதாக துபாயில் நடைபெறும் டி-20 உலகக் கோப்பைக்கு பிறகு டி-20 கேப்டன் பதவியை விராட் கோலியிலிருந்து விலகுவதாக விராட் கோலி தெரிவித்துள்ள நிலையில் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் கிரிக்கெட் உலகில் நிலவி வரும் நிலையில் சுனில் கவாஸ்கர் இதை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து