முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்.லின் 2-ம் பகுதியை வெற்றியுடன் தொடங்குமா சி.எஸ்.கே ? மும்பை இந்தியன்சுடன் இன்று மோதல்

சனிக்கிழமை, 18 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

துபாயில் இன்று மீண்டும் தொடங்கவுள்ள ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல்.லின் 2-ம் பகுதி ஆட்டத்தின் 30-வது லீக்கில் எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்தியாவில் தொடங்கியது. மே 2-ம் தேதி 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்கள் கொரோனா தொற்றால் இந்தியாவில் நடத்தப்படவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இந்தப் போட்டிகள் மாற்றப்பட்டது.

14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட ஆட்டங்கள் இன்று (19-ம் தேதி) தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. எஞ்சிய 27 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் ஆக மொத்தம் 31 ஆட்டங்கள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இறுதிப்போட்டி... 

துபாயில் 13 , சார்ஜா 10, அபுதாபியில் 8 ஆட்டங்களும் நடக்கிறது. அக்டோபர் 8-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. முதல் குவாலிபையர் அக்டோபர் 10-ம் தேதியும், எலிமினேட்டர் 11-ம் தேதியும், 2-வது குவாலிபையர் 13-ம் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 15-ம் தேதி துபாயிலும் நடக்கிறது.

29 ஆட்டங்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகியவை 5 வெற்றி, 2 தோல்வியுடன் தலா 10 புள்ளிகள் பெற்று முறையே 2-வதுமற்றும் 3-வது இடங்களில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் 8 புள்ளியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் (6 புள்ளி), பஞ்சாப் கிங்ஸ் (6 புள்ளி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (4 புள்ளி), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (2 புள்ளி ) ஆகிய அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களில் உள்ளன. லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் “பிளே ஆப்” சுற்றுக்கு முன்னேறும்.

முதல் ஆட்டத்தில்...

துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி, மும்பையை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி 5-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. 

கடந்த 2020 சீசன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்கு சோகமானதாக அமைந்தது. முதன்முறையாக பிளே ஆ‘ஃ‘ப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. எனினும் அதில் இருந்து மீண்ட சென்னை அணி நடப்பு 2021 தொடரின் முதல் சிறப்பாக ஆடி 5 வெற்றிகளுடன் அணிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

சென்னை அணியில் முக்கிய வீரரான டுபிளெஸிஸ் காயத்தால் பங்கேற்பது சந்தேகமே. கொரோனா குவாரன்டைன் விதிகளால் இங்கிலாந்து ஆல்ரவுண்டா் சாம் கர்ரனும் தொடரில் பங்கேற்கவில்லை. பேட்டிங்கில் சுரேஷ் ரெய்னா, ருத்துராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, உத்தப்பா, டோனி ஆகியோர் வலு சோ்க்கின்றனா். சாம் கர்ரன் இல்லாதது சென்னைக்கு பலவீனமாக அமையும். மிடில் ஆா்டரில் ராயுடு, டோனி, ஜடேஜா களமிறங்கலாம்.

4-ம் இடத்தில்...

அதே வேளை மும்பை இந்தியன்ஸ் அணி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. மேலும் மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சா்மா பேட்டிங்கில் சிறப்பான ஃபார்முடன் உள்ளார். ஆல் ரவுண்டா் பொல்லார்ட் , குயிண்டன் டி காக், சூரியகுமார் யாதவும் பேட்டிங் வரிசையில் நம்பிக்கை தருகின்றனா். ரோஹித்-டி காக் தொடக்க வரிசையில் களம் இறங்குவா். மூன்றாவது வரிசையில் இஷான் கிஷான், 4-வது வீரராக சூரியகுமார் யாதவும் களமிறங்கலாம் எனத் தெரிகிறது. ஹர்த்திக் பாண்டியா, பொல்லார்ட், க்ருணால் பாண்டியா என 3 ஆல்ரவுண்டா்கள் மும்பை தரப்பில் உள்ளனா்.

அணிகள் விவரம்:

ருத்துராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஹேசல்வுட், சா்துல் தாகுா், லுங்கிநிகிடி, தீபக் சஹார். 

ரோஹித் சா்மா (கேப்டன்), குயிண்டன் டி காக், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், பொல்லார்ட், ஹர்த்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, நாதன் கூல்டா் நைல், ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், ஜஸ்ப்ரீத் பும்ரா, டிரென்ட் பௌல்ட்.

அதிக சிக்ஸர்கள்...

கடந்த வருடம் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகளில் 137 சிக்ஸர்களுடன் முதலிடம் பிடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 105 சிக்ஸர்களுடன் ராஜஸ்தானுக்கு 2-ம் இடம். இந்த வருடம் பந்தை சிக்ஸருக்குப் பறக்க விடுவதில் சிஎஸ்கே முன்னணி வகிக்கிறது. சிக்ஸர்கள் பட்டியலில் 43 சிக்ஸர்களுடன் மும்பை அணி 7-வது இடத்தை ஹைதராபாத் அணியுடன் இணைந்து வகிக்கிறது. டெல்லி அணி சிக்ஸர்கள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 32 சிக்ஸர்கள் மட்டுமே. ஏழு ஆட்டங்களில் 62 சிக்ஸர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.

முதலிடத்தில் ராகுல்...

இந்த வருடம், அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் பஞ்சாப் அணியின் கே.எல். ராகுல் 16 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.  ஐ.பி.எல் அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன்கள்.

1) கே.எல். ராகுல் - 16, 2) பேர்ஸ்டோ - 15, 3) ராயுடு - 13, 4) பட்லர் - 13, 5) ரஸ்ஸல் - 13, 6) டு பிளெஸ்சிஸ் - 13, 7) பொலார்ட் - 13.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து