முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு வங்கிகளில் முறைகேடாக நகைக் கடன் பெற்றவர்களிடம் பணத்தை வசூலிக்க உத்தரவு

புதன்கிழமை, 22 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கூட்டுறவு வங்கிகளில் முறைகேடாக நகைக்கடன் பெற்றோரிடம் பணத்தை வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த முறை ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. கடைசி நேரத்தில் நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இதையடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட பல்வேறு வாக்குறுதிகள் குறித்து அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. 

அதை தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியில் நகைக் கடன் ரத்தில் நடந்த மோசடி குறித்து தி.மு.க. ஆட்சியில் ஆய்வு செய்யப்பட்டு வந்ததாகவும் விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளன்று கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள்பட்ட நகைக் கடன்கள் தகுதிவாய்ந்தவர்களுக்கு ரத்து செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து தகுதி வாய்ந்தவர்கள் யார் என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் ஒரே ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றது தெரியவந்தது. அந்த வகையில் அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஒரு சுற்றறிக்கையை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் தமிழகத்தில் முறைகேடாக நகைக் கடன் பெற்றவர்களிடம் பணத்தை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நகைக் கடன் தவணை தவறி இருப்பின் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி தொகையை வசூலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு, ரேஷன் கார்டு அடிப்படையில் 5 சவரனுக்கு மேல் நகைக் கடன் பெற்றவர்களின் பட்டியலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 5 சவரனுக்கு மேல் நகைக் கடன் பெற்றவர்களிடம் இருந்து நகைக் கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகைக் கடன்களின் தவணையை கட்ட தவறியவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஒரே குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றிருந்தால் அவர்களுக்கு நகைக் கடனில் தள்ளுபடி இல்லை. அது போல் விதிகளை மீறி பெறப்பட்ட நகைக் கடன்களை வசூலிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்துக்கு 5 பவுனுக்குள் இருக்கும் நகைக் கடன்கள் தகுதிகளின் கீழ் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 9 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 9 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 11 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 11 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 9 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து