முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வரும் 26-ம் தேதி 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

வியாழக்கிழமை, 23 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்பேரில் தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தலின்படி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று மெகா சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி  2-ம் கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்த மெகா சிறப்பு முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதில் 10 லட்சத்து 85 ஆயிரத்து 97 பேருக்கு முதல் தவணையும், 5 லட்சத்து 58 ஆயிரத்து 782 பேருக்கு 2-வது தவணையும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை  3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

 

தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 20 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் நடைபெற உள்ளது. அன்று ஒரே நாளில் 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் இதுவரை 9 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தற்போது கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசி உள்ளது. மேலும் 14 லட்சம் தடுப்பூசி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து