முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

வியாழக்கிழமை, 23 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

9 பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, ஆகஸ்டு 24-ம் தேதி நடைபெற்ற  நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கையின் போது,  நகராட்சி சார்பில் கொள்கை விளக்க கையேடு வெளியிடப்பட்டது. அப்போது உரையாற்றிய  அமைச்சர் கே.என் நேரு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள்தொகை 48.45 சதவீதம் ஆகும். 2021-ம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புற மக்கள்தொகை சுமார் 53 சதவீதமாக உயர்ந்துள்ளதெனக் கருதப்படுகிறது.  எனவே, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை ஒட்டியுள்ள நகர்ப்புறத் தன்மையோடு உள்ள பகுதிகளை நகர்ப்புறங்களோடு இணைத்து, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

தற்போது நகராட்சியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியாகவும், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாகவும் அதுபோன்றே மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிலவற்றை விரிவாக்கம் செய்திடவும், தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. 

தற்போதுள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில், நகர்ப்புறத்தன்மை, மக்கள்தொகை அடர்த்தி, ஆண்டு வருமானம், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும் நகர்ப்புறமாக மாறி வருகின்ற இந்தப் பகுதிகளிலும் நகரத்துக்கு இணையான அடிப்படை வசதிகளை அளித்திடும் நோக்கிலும் பின்வருமாறு உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படுகின்றன.

தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும். மேலும், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றி வளர்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும்.

 திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளும், செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி, மன்னார்குடி ஆகிய நகராட்சிகளும் அவற்றைச் சுற்றியுள்ள வளர்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும், ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.  அதன்படி கடந்த 12-ம் தேதி தாம்பரம், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி நகரங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.  இதனால் தற்போது தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த நிலையில், தற்போது 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி தென்காசி மாவட்டம் சுரண்டை, நெல்லை மாவட்டம் களக்காடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மாங்காடு, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் , இராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து