முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 34-வது லீக் ஆட்டம்: ராகுல் திரிபாதி - வெங்கடேஷ் அய்யரின் அதிரடியால் கொல்கத்தா அபார வெற்றி

வெள்ளிக்கிழமை, 24 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதியும், வெங்கடேஷ் அய்யரும் ஆடிய அதிரடி ஆட்டத்தால் 34-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளது.

திரிபாதி - வெங்கடேஷ்...

அண்மையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை மிக எளிதாக வென்ற உற்சாகத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை அணியை 155 ரன்களுக்குள் முடக்கியது. 156 ரன்கள் என்ற இலக்கை வெறும் 15.1 ஓவரில் எட்டி வெற்றியையும் வசமாக்கியது. கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதி 42 பந்துகளில் 74 ரன்களைக் குவித்து இறுதி வரை களத்தில் நின்றார். அவர்கள் இருவரும் சேர்ந்து 52 பந்துகளில் 88 ரன்களை எடுத்தனர்.

4-வது இடத்துக்கு...

இந்த வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா அணி 4-வது இடத்துக்கு முன்னேறியது. மும்பை அணி ஆறாவது இடத்துக்கு சறுக்கியது. சுனில் நரைனின் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுக்கும் வழக்கமும் மாறிவிடவில்லை. ஐ.பி.எல் போட்டிகளில் ஏழாவது முறையாக சுனில் நரைன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை எடுத்தார். இந்த முறை ரோஹித் சர்மாவின் ஸ்வீப் ஷாட் நேரந் தவறியதால் லாங் ஆனில் கேட்சாக மாறிவிட்டது.

ஆரம்பம் அதிரடி...

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்கம் அதிரடியாகவும் அதே நேரத்தில் வலுவாகவும் இருந்தது. குயின்டன் டி காக்கும் ரோஹித் சர்மாவும் சேர்ந்து கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களைப் பதற வைத்தார்கள். எல்லா பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஃபெர்குசன், பிரசித் கிருஷ்ணா, ரஸ்ஸல் என முன்னணி பந்துவீச்சாளர்கள் அனைவரின் பந்துவீச்சையும் சிக்சர்களும், பவுண்டரிகளுமாகப் பறக்க விட்டார்கள்.

சுனில் நரேன்...

தொடக்க பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டைப் பறி கொடுக்காமல் 56 ரன்களை மும்பை அணி எடுத்திருந்தது. சுனில் நரேன் பந்துவீச்சைத் தொடங்கிய போது ஆட்டத்தின் போக்கே மாறிப் போனது. அவரது பந்தில் ரோஹித் சர்மா வெளியேறிவிட மும்பையின் ரன் குவிப்பு வேகமும் குறைந்து போனது.

பொலார்டு அதிரடி...

பத்தாவது ஓவருக்கு மேல் மும்பை வீரர்கள் நத்தை வேகத்தில் ரன்களை எடுத்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இறுதியாக பொலார்டின் கடைசி நேர அதிரடியால் மும்பை அணி 155 ரன்களை எடுத்தது. மும்பையின் 156 என்ற வெற்றி இலக்கு கொல்கத்தா அணிக்கு எதுவுமில்லை என்பது போல தொடக்கத்தில் இருந்தே ஆட்டம் அமைந்திருந்தது. உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களான ட்ரென்ட் போல்ட்டும், பும்ராவும் ரன்களை வாரிக் கொடுக்க வேண்டியிருந்தது.

சுப்மன் கில் - திரிபாதி...

சுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், அடுத்து வந்த ராகுல் திரிபாதி ஆகியோரின் அதிரடியால் மும்பை அணி நிலைகுலைந்து போய்விட்டது. மும்பை அணிக்கு எந்தவொரு தருணத்திலும் வெற்றிக்கான நம்பிக்கையை அவர்கள் தந்துவிடவில்லை. இதனை அடுத்து கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

யுவராஜ் சிங்...

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய வெங்கடேஷ் அய்யர் ஐ.பி.எல்லில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சிறப்பாக ஆடி 41 ரன்களை எடுத்து வெற்றிக்கு உதவிய அவர், இரண்டாவது போட்டியில் அரைச் சதம் அடித்து நம்பிக்கை அளித்திருக்கிறார். அவரை இன்னொரு யுவராஜ் சிங் என்று புகழ்ந்திருக்கிறார் முன்னாள் வீரரான பார்த்திவ் படேல்.

ரோஹித் புதிய சாதனை 

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 18 ரன்களை எடுத்தபோது புதிய ஐ.பி.எல் சாதனையை நிகழ்த்தினார் ரோஹித் சர்மா. ஐ.பி.எல் போட்டியில் ஓர் அணிக்கு எதிராக மட்டும் 1000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்தார். 

 

ரோஹித் சர்மாவுக்கு கொல்கத்தாவுக்கு எதிராக இதுவரை 29 இன்னிங்ஸில் 1015 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 46.13, ஸ்டிரைக் ரேட் - 132.16. 1 சதமும் 6 அரை சதங்களும் அடித்துள்ளார். விராட் கோலி டேவிட் வார்னர் போன்றோரெல்லாம் இந்தச் சாதனையில் இவருக்கு அடுத்தபடியாகத்தான் இருக்கிறார்கள். ஐபிஎல் போட்டியில் ஓர் அணிக்கு எதிராக மட்டும் அதிக ரன்களை எடுத்த வீரர்களில் டேவிட் வார்னருக்கு 2-ம் இடம். பஞ்சாப் அணிக்கு எதிராக 943 ரன்கள் எடுத்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து